பிரதமர் அலுவலகம்
பட்டயக் கணக்காளர்கள் தினத்தையொட்டி, பட்டயக் கணக்காளர்கள் சமூகத்தினருக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
01 JUL 2026 12:50PM by PIB Chennai
பட்டயக் கணக்காளர்கள் தினத்தையொட்டி, பட்டயக் கணக்காளர்கள் சமூகத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியப் பொருளாதார பயணத்தில் பட்டயக் கணக்காளர்கள் நீண்டகாலமாக நம்பத்தகுந்த கூட்டாளர்களாக திகழ்கின்றனர் என்று திரு மோடி கூறியுள்ளார். வெளிப்படைத்தன்மை, தொழில்திறன், ஆகியவற்றுக்கான அவர்களின் அர்ப்பணிப்பு மூலம், நாட்டின் நிதி அமைப்புகளை வலுப்படுத்தியும் வணிகங்களுக்கு ஆதரவளித்து தொழில்முனைவோருக்கு ஊக்கமளித்தும் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியும் வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“பட்டயக் கணக்காளர்கள் தினத்தையொட்டி, பட்டயக் கணக்காளர்கள் சமூகத்தினருக்கு வாழ்த்துகள். இந்தியப் பொருளாதார பயணத்தில் பட்டயக் கணக்காளர்கள் நீண்டகாலமாக நம்பத்தகுந்த கூட்டாளர்களாகத் திகழ்கின்றனர். வெளிப்படைத்தன்மை, தொழில்திறன், ஆகியவற்றுக்கான அவர்களின் அர்ப்பணிப்பு மூலம், நாட்டின் நிதி அமைப்புகளை வலுப்படுத்தியும் வணிகங்களுக்கு ஆதரவளித்து தொழில்முனைவோருக்கு ஊக்கமளித்தும் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியும் வருகின்றனர். அவர்களுடைய நிபுணத்துவம் பொருளாதார வளர்ச்சிக்கும் நாட்டைக் கட்டமைப்பதற்கும் பெரும் பங்களிக்கிறது. வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கி நாம் முன்னேறும் சூழலில், தொழில் முயற்சிகள் செழிப்படையவும் அனைவருக்கும் வாய்ப்புகள் சென்றடையக் கூடிய சூழலை உருவாக்கவும் அவர்களுடைய முயற்சிகள் உதவுகின்றன.
***
(Release ID: 2279714)
SS/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2280005)
आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam