பிரதமர் அலுவலகம்
விஜயா மேத்தாவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
01 JUL 2026 11:41AM by PIB Chennai
விஜயா மேத்தாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த விஜயா மேத்தா, நவீன மராத்தி நாடகத்தின் முன்னோடி என்றும் தமது படைப்பாற்றல், கலைத்திறனால் அறியப்பட்டவர் என்றும் திரு மோடி கூறியுள்ளார். அவரது பணிகள், பல தலைமுறையைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், நாடக ரசிகர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“திருமதி விஜயா மேத்தாவின் மறைவு மிகவும் கவலையளிக்கிறது. அவர் கலாச்சாரம், திரைப்படம் ஆகியவற்றின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவராக என்றும் நினைவுகூரப்படுவார்.
நவீன மராத்தி நாடகத்தின் முன்னோடியான அவர், தமது படைப்பாற்றல், கலைத்திறனால் அறியப்பட்டவர். அவரது பணிகள், பல தலைமுறையைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், நாடக ரசிகர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது.
இந்தத் துயரமான தருணத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், நலன் விரும்புவோர், ஒட்டுமொத்த கலை, சமூகத்தினருடன் உள்ளது. ஓம் சாந்தி.”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279686®=3&lang=1
***
SS/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2279790)
आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam