வேளாண் மற்றும் ஊரகத் தொழிற்துறை அமைச்சகம்
அருணாசலப்பிரதேசம், அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் இன்று ஆய்வு செய்கிறார்
प्रविष्टि तिथि:
01 JUL 2026 9:29AM by PIB Chennai
மத்திய வேளாண் விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான், திங்கட்கிழமை அன்று அருணாசலப்பிரதேசம் சென்றார். ஆனால், மோசமான வானிலை காரணமாக அங்கு வான்வழி ஆய்வை அவரால் மேற்கொள்ள முடியவில்லை. ஜூலை 1 அன்று, அருணாசலப்பிரதேசம், அசாமில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தரைவழியாகவும், வான்வழியாகவும் அவர் விரிவாக ஆய்வு மேற்கொள்ள உள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், இதர குடும்பத்தினரின் சூழல் குறித்து மதிப்பீடு செய்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார். அவருடன் நாடாளுமன்ற விவகாரங்கள், சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ, அருணாசலப்பிரதேச முதலமைச்சர் திரு பெமா காண்டு ஆகியோரும் செல்லவுள்ளனர்.
முன்னதாக, திங்கட்கிழமை அன்று அருணாசலப்பிரதேசத்தில் திரு சௌகான் உள்ளூர் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். மோசமான வானிலையால் ஹெலிகாப்டரை இயக்குவது தடைபட்டாலும் அரசின் உறுதியை பலவீனப்படுத்தவில்லை என்று கூறினார். ஒவ்வொரு விவசாயும் ஒவ்வொரு குடும்பமும் தேவையான உதவிகளை பெறுவதை உறுதி செய்யும் வகையில், அருணாசலப்பிரதேசம் அசாமில் புதன்கிழமை அன்று தரைவழியாகவும் வான்வழியாகவும் ஆய்வு செய்வோம் என்று திரு சௌகான் தெரிவித்தார்.
தில்லியிலிருந்து இட்டா நகர் செல்லும் வழியில் அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுடன் உரையாடி விவரங்களை கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளதால் தங்களுடைய வேளாண் நிலம், பயிர்கள், வீடுகள், வாழ்வாதாரம் ஆகியவை எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதை அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279665®=3&lang=1
***
SS/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2279787)
आगंतुक पटल : 15