பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

விவாடெக் 2026-ல் பிரதமர் பங்கேற்கிறார்

प्रविष्टि तिथि: 18 JUN 2026 7:35PM by PIB Chennai

பாரிஸில் நடைபெற்ற ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப  புத்தொழில் நிறுவனங்களின் நிகழ்வான 'விவாடெக் 2026'-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரோனுடன் இணைந்து பங்கேற்றார்.

தொழில்நுட்ப தொழில்முனைவோர், புத்தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், வணிகத் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சியில்  உரையாற்றிய பிரதமர், மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு, முன்னணி தொழில்நுட்பங்கள் குறித்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையையும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இந்திய-பிரான்ஸ் ஒத்துழைப்பின் விரிவடைந்து வரும் போக்கையும் எடுத்துரைத்தார். டிஜிட்டல் பரிவர்த்தனைகள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த வேளாண் முன்னேற்றம் முதல் அதிநவீன விண்வெளிப் பயன்பாடுகள் வரை, தொழில்நுட்பம் இந்தியாவில் பெரும் மாற்றங்களைச் சாத்தியமாக்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து, பிரதமர் திரு மோடியும் அதிபர் திரு  மேக்ரோனும், தொழில், சுகாதாரம், நிலைத்தன்மை,  போக்குவரத்து ஆகிய துறைகளுக்கான முன்னணி தொழில்நுட்பங்களையும் நடைமுறைத் தீர்வுகளையும் காட்சிப்படுத்திய இந்திய புத்தொழில் நிறுவனங்கள்,  கண்டுபிடிப்பாளர்களுடன் கலந்துரையாடினர்.

விவாடெக் 2026 நிகழ்வில் இந்தியா செயற்கை நுண்ணறிவு பங்காளராக செயல்படுகிறது. செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, சுகாதாரத் தொழில்நுட்பம், தூய்மையான தொழில்நுட்பங்கள், போக்குவரத்து,  மேம்பட்ட கணினித் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவின் புத்தாக்கச் சூழலியலைக் காட்சிப்படுத்தும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், விவாடெக் நிகழ்வில் இந்தியா இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய பங்கேற்பை மேற்கொள்கிறது. இந்த நிகழ்வில் 80-க்கும் மேற்பட்ட இந்திய ஆழ்தொழில்நுட்ப நிறுவனங்களும் புத்தொழில் நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

விவாடெக் மாநாட்டில் பிரதமரின் பங்கேற்பு, இந்தியா- பிரான்ஸ் தொழில்நுட்பச் சூழலியல்களுக்கு இடையிலான கூட்டாண்மைகளை மேலும் ஆழப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவாடெக் மாநாட்டில் இந்தியாவின் ஈடுபாடு பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது: 2021-ல் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார். 2022-ல் 'ஆண்டின் சிறந்த நாடு' என்ற விருதை இந்தியா பெற்றது. மேலும், இந்த மாநாடு சமீபத்தில் பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாட்டுடன் தனது ஒத்துழைப்பை முறைப்படுத்தியுள்ளது. இரு நாடுகளும் 2026-ம் ஆண்டை இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டாகக் கொண்டாடுவதால், இந்த ஆண்டு இந்தியாவின் பங்கேற்பு முக்கியத்துவம் பெறுகிறது.

***

(Release ID: 2274838)

SS/RB/PD


(रिलीज़ आईडी: 2279717) आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam