ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தகுதியுள்ள கிராமப்புறத் தொழிலாளி ஒருவரும், ஒரு நாள் கூட வேலையின்றி இருக்கக்கூடாது: மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான்

प्रविष्टि तिथि: 30 JUN 2026 5:45PM by PIB Chennai

‘வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கச் சட்டம், 2025', நாளை (ஜூலை 1 2026 ) முதல் இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்தச் சட்டம் கிராமப்புற வேலைவாய்ப்பு, வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் நிலையான கிராம மேம்பாட்டிற்கான வலுவான கட்டமைப்பை உருவாக்கும். இது தகுதியுள்ள ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திற்கும் சட்டப்பூர்வமான ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை 100 நாட்களிலிருந்து 125 நாட்களாக உயர்த்துகிறது. மேலும், '2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையை விரைவுபடுத்தும் அதே வேளையில், கிராமப்புறங்களில் நீடித்து நிலைக்கக்கூடிய சொத்துக்களை உருவாக்கவும் இந்தச் சட்டம் வழிவகுக்கிறது.

 

 

நாடு தழுவிய அளவில் இந்தச் சட்டம் அமலுக்கு வரவுள்ள வேளையில், தகுதியுள்ள கிராமப்புறத் தொழிலாளி ஒருவர் கூட, ஒரு நாள் கூட வேலையின்றி இருக்கக்கூடாது என்று மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் வலியுறுத்தியுள்ளார். புதிய நடைமுறைக்குத் தடையின்றி மாறுவதை உறுதி செய்வதற்காக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து நிர்வாகம், நிதி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து முன்னேற்பாடுகளையும் மதிகடியா அரசு நிறைவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

 

 

“தகுதியுள்ள எந்தவொரு கிராமப்புறத் தொழிலாளியும், ஒரு நாள் கூட வேலையில்லாமல் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வதே எங்களின் முன்னுரிமையாகும். இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நிறைவு செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பணியாற்றியுள்ளன. போதுமான நிதி ஆதாரங்கள் வழங்கப்பட்டுள்ளன, அமலாக்க அமைப்புகள் முழுமையாக நிறுவப்பட்டுள்ளன. மேலும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் தடையின்றி தொடரும். 125 நாட்கள் ஊதிய வேலைக்கான மேம்படுத்தப்பட்ட உத்தரவாதம், கிராமப்புற வாழ்வாதாரங்களை வலுப்படுத்தும், நீடித்த சமூகச் சொத்துக்களை உருவாக்கும் மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா  தொலைநோக்குப் பார்வையை விரைவுபடுத்தும்," என்று திரு சவுகான் கூறினார்.

 

ஜூலை 2 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள ‘வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கச் சட்டம், 2025’-ன் தேசிய அளவிலான தொடக்க விழாவில், அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் இதை முறைப்படி துவக்கி வைப்பார். 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279446&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2279643) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , Telugu , English , हिन्दी , Kannada , Malayalam