பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராணுவத் தலைமை தளபதியாக ஜெனரல் தீரஜ் சேத் பொறுப்பேற்றுக் கொண்டார்

प्रविष्टि तिथि: 30 JUN 2026 2:37PM by PIB Chennai

40 ஆண்டுகளுக்கு மேல் சிறப்புமிக்க சேவை புரிந்த ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி 2026 ஜூன் 30 அன்று ஓய்வு பெற்றதையடுத்து ராணுவ தலைமை தளபதியாக ஜெனரல் தீரஜ் சேத் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்விக் கழகத்தின் முன்னாள் மாணவரான ஜெனரல் தீரஜ் சேத், 1986, டிசம்பரில் ஆயுதப்படை பிரிவில் பணியில் சேர்ந்தார். இதைத் தொடர்ந்து சுமார் 40 ஆண்டுகள் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள அவர், செயல்பாடு, வியூகம் வகுத்தல், திறன் மேம்பாடு போன்றவற்றில் விரிவான அனுபவம் கொண்டவர். இந்திய ராணுவத்தின் போர்த் திறமைகள் உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்துள்ளார். நீண்டகால மாற்றத்திற்கும் வழிவகுத்துள்ளார்.

ஜெனரல் தீரஜ் சேத், லெப்டினன்ட் ஜெனரலாக இருந்த போது இந்திய ராணுவத்தின் முதன்மையான போர் அணிவகுப்புகளில் ஒன்றான சுதர்சன சக்கர வியூகத்தை வழி நடத்தினார்.

ராணுவ நவீனமயத்திற்கு அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். பாரீசில் கமாண்ட் மற்றும் ராணுவ வீரர் பயிற்சியையும் பெற்றவர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279326&reg=3&lang=1

****

TV/SMB/KPG/SH


(रिलीज़ आईडी: 2279489) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Gujarati , Telugu , Malayalam