உள்துறை அமைச்சகம்
பிரதமரின் குடும்பநல கண்காணிப்பு என்ற முன்னோடி திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 JUN 2026 9:51PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா ஜூன் 28 அன்று குஜராத் மாநிலம் காந்தி நகரில் பிரதமரின் குடும்பநல கண்காணிப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், மத்திய உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அமித் ஷா, நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு அதன் 100 ஆண்டுகால வரலாறு இரண்டு பகுதிகளாக அமையும் என்று கூறினார். 2014-ம் ஆண்டிற்கு முந்திய இந்தியா என்பது முதல் பகுதியாகவும், 2014-ம் ஆண்டிற்குப் பிந்தைய இந்தியா என்பது இரண்டாவது பகுதியாகவும் இருக்கும் என்று அவர் கூறினார்.
கடந்த 2014-ம் ஆண்டில் நாட்டின் பிரதமராக திரு நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்ட பிறகு, ஒவ்வொரு துறையிலும் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நாட்டின் முழுமையான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை கருத்தில்கொண்டு நீண்டகால செயல்திட்டங்களை வகுத்து அவற்றை திறம்பட செயல்படுத்தி வருவதாக அவர் கூறினார்.
நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவது, கலாச்சாரப் பாதுகாப்பு, கல்விக் கொள்கையை செயல்படுத்துதல், பொருளாதார மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் என ஒவ்வொரு துறையிலும் தற்சார்பு நிலையை எட்டும் வகையில் கொள்கைகள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக திரு அமித் ஷா தெரிவித்தார்.
மத்திய அரசு செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்களின் தரவுகளை ஒருங்கிணைத்து, பிறப்பு இறப்பு தொடர்பான தரவுகளுடன் இணைப்பதன் மூலம் பிரதமரின் குடும்பநலன் கண்காணிப்பு செயலி வாயிலாக ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனி அடையாள எண் வழங்கும் பணி மேற்கொள்ளப்படும் என்று திரு அமித் ஷா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278701®=3&lang=1
***
SS/SV/LDN/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2279389)
வருகையாளர் எண்ணிக்கை : 26