ஊரக வளர்ச்சி அமைச்சகம்
தேசிய ஊரக மேம்பாட்டு மாநாடு 2026, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான செயல் திட்டத்தை உருவாக்கியது
प्रविष्टि तिथि:
30 JUN 2026 11:44AM by PIB Chennai
மத்திய, மாநில அரசுகளின் வலுவான ஒத்துழைப்பு, சமூகத்தால் வழிநடத்தப்படும் வளர்ச்சி, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் நிர்வாகம் ஆகியவற்றின் மூலம் வளர்ச்சியடைந்த கிராமம், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை விரைவுப்படுத்தும் உறுதியுடன் தேசிய ஊரக மேம்பாட்டு மாநாடு 2026 புதுதில்லியில் நடைபெற்றது. இந்த இரண்டு நாள் மாநாடு 2026 ஜூன் 29 அன்று நிறைவடைந்தது. முக்கியமான ஊரக மேம்பாட்டுத் திட்டங்களின் அமலாக்கம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சிறந்த நடைமுறைகளின் பரிமாற்றம், அடுத்தக்கட்ட கிராமப்புற மாற்றத்திற்கான செயல்திட்டம், ஆகியவற்றை ஆய்வு செய்யும் தளமாக இந்த மாநாடு அமைந்தது.
மத்திய ஊரக வளர்ச்சி, வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சி ங் சௌகான் இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். விபி-ஜிராம்ஜி சட்டம் 2025-ஐ தீவிரமாக செயல்படுத்துவது இந்த மாநாட்டின் முதன்மை நோக்கமாக இருந்தது. 2029-க்குள் 6 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்ப தலையீடுகளை அதிகரிப்பதற்கான திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக சரஸ் சக்தி தொகுப்பு, சரஸ் சக்தி காபி மேசை புத்தகம் ஆகியவை ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் வெளியிடப்பட்டன. சரஸ் சக்தி தொகுப்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கியுள்ள முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் பற்றிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன. சரஸ் வாழ்வாதார காட்சிக் கூடத்தில் கைத்தறித் துணிகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், பாரம்பரிய உணவு வகைகள் போன்றவை இடம் பெற்றிருந்தன. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தனித்தன்மை கொண்ட கலைப் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279271®=3&lang=1
***
SS/SMB/KPG/KR
(रिलीज़ आईडी: 2279341)
आगंतुक पटल : 7