மாநிலங்களவைச் செயலகம்
azadi ka amrit mahotsav

மாநிலங்களவைக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட / மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மாநிலங்களவைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

प्रविष्टि तिथि: 29 JUN 2026 1:45PM by PIB Chennai

மாநிலங்களவைக்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட / மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட  திரு மான்சிங் மெராமன் பார்மர், திரு தருண் சுக், டாக்டர் அல்கா சிங், திரு ஜிதேந்திர மேக்ஜிபாய் கன்ஜாரியா, திரு ராஜேந்திர ஹீராலால் ஜெயின், திரு எம் நாகராஜா, திருமதி அதிகாரிமயூம் சாரதா தேவி ஆகிய ஏழு உறுப்பினர்களுக்கு மாநிலங்களவைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (29.06 2026)  மாநிலங்களவை வளாகத்தில் பதவிப்பிரமாணமும் உறுதிமொழியேற்பும் செய்து வைத்தார். .

நான்கு உறுப்பினர்கள் இந்தியிலும், ஒருவர் கன்னடத்திலும், ஒருவர் பஞ்சாபியிலும், ஒருவர் மணிப்புரியிலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இரண்டு உறுப்பினர்கள் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ்; மாநிலங்களவையின் அவைத் தலைவரும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சருமான திரு ஜெகத் பிரகாஷ் நட்டா; நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு; சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால்; மாநிலங்களவை உறுப்பினர்களான திரு ஜெயராம் ரமேஷ், திரு பிரஃபுல் படேல்; மாநிலங்களவை பொதுச் செயலாளர் திரு பி சி மோடி, செயலகத்தின் மூத்த அதிகாரிகள்  இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

 

***

(Release ID: 2278894)

SS/SMB/KR

 


(रिलीज़ आईडी: 2278964) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Gujarati , Kannada