சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
சுகாதார, குடும்ப நல மன்றக் கூட்டத்தில் ரத்தசோகை இல்லாத இந்தியா தொடர்பான செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா வெளியிடுகிறார்
प्रविष्टि तिथि:
28 JUN 2026 1:44PM by PIB Chennai
ரத்தசோகையை எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் முயற்சிகளைத் துரிதப்படுத்தும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா, 2026 ஜூன் 29 அன்று புதுதில்லியில் நடைபெறவுள்ள மத்திய சுகாதார, குடும்ப நல மன்றத்தின் 16-வது கூட்டத்தின் போது, ரத்தசோகை இல்லாத இந்தியா திட்டம் தொடர்பான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை வெளியிடுகிறார்.
ரத்தசோகைக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் இந்தத் தொடக்கம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும். இது விரிவான, மக்களை மையப்படுத்திய இயக்கமாக அமையும். இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்குவதையும் தாண்டி, பரிசோதனை, சிகிச்சை மேலாண்மை, சரியான உணவுப் பழக்கம், டிஜிட்டல் கண்காணிப்பு, சமூகப் பங்கேற்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான அணுகுமுறையாக இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
16-வது சுகாதார, குடும்ப நல மன்றக் கூட்டத்தின் போது செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுவது, ஊட்டச்சத்து, தாய் - சேய் குழந்தை நலனை வலுப்படுத்துவது ஆகியவற்றில் அரசின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை எடுத்துரைப்பதோடு, ஆரோக்கியமான, ரத்தசோகை இல்லாத பாரதத்தை நோக்கிய முன்னேற்றத்தை மேலும் விரைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278584®=3&lang=1
****
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2278597)
आगंतुक पटल : 8