மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

12 குறைக் கடத்தித் திட்டங்களில் ₹1.64 லட்சம் கோடி முதலீட்டிற்கு ஒப்புதல் - மின்னணுவியல் துறை இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதிப் பிரிவாக உருவெடுத்துள்ளது

प्रविष्टि तिथि: 27 JUN 2026 6:24PM by PIB Chennai

2015-ம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி, இந்தியாவை அறிவுசார் பொருளாதாரமாக மாற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் 'டிஜிட்டல் இந்தியா' திட்டம் தொடங்கப்பட்டது. பதினொரு ஆண்டுகள் கழித்து, அதிவேக பிராட்பேண்ட் மூலம் இணைக்கப்பட்ட கிராமப் பஞ்சாயத்திலும், நொடிகளில் நேரடிப் பணப் பரிமாற்றங்களைப் பெறும் விவசாயிகளிடையேயும், ஸ்மார்ட்போன் மூலம் தரமான கல்வியைப் பெறும் மாணவர்களிடையேயும் என இந்தியர்களின் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அந்த மாற்றம் தெளிவாகத் தெரிகிறது. இணைய இணைப்புகள் முன்பை விட சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளன. மேலும் மொபைல் டேட்டாவின் விலை பல மடங்கு குறைந்துள்ளது. இதனால், டிஜிட்டல் அணுகல் உலகின் மிகவும் மலிவான அணுகல்களில் ஒன்றாக மாறியுள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டம் 11 ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில், அது ஒரு தீர்க்கமான திருப்புமுனையில் உள்ளது. தனது முதல் பத்து ஆண்டுகளில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு, நிதி உள்ளடக்கச் சேவை, மக்களுக்கான சேவை வழங்கல் ஆகிய அடித்தளங்களை உருவாக்கியுள்ள இத்திட்டம், தற்போது இந்தியாவின் தொழில்நுட்ப எதிர்காலத்தை வரையறுத்து, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு அடித்தளமாக அமையவிருக்கும் செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்தி உற்பத்தி ஆகிய முன்னணித் துறைகளில் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.

₹10,372 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டில் அங்கீகரிக்கப்பட்ட இந்தியா செயற்கை நுண்ணறிவுத் திட்டம், கடந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. இதன் அடித்தளமாக, 45,000-க்கும் மேற்பட்ட ஜிபியு-க்களைக் கொண்ட ஒரு பகிரப்பட்ட கணினி வசதி நிறுவப்பட்டுள்ளது. இது தேசிய அளவில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்கான கணினி அமைப்பை உருவாக்குகிறது.

பெருநகர மையங்களைத் தாண்டி செயற்கை நுண்ணறிவுத் திறன் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் 27 தரவு, செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்தியாவின் செமிகண்டக்டர் சூழலமைப்பு, கொள்கையிலிருந்து உற்பத்திக்குத் தீர்க்கமாக முன்னேறியுள்ளது. இந்திய குறைக்கடத்தி இயக்கத்தின் கீழ், சுமார் ₹1.64 லட்சம் கோடி முதலீட்டுடன் 12 செமிகண்டக்டர் உற்பத்தித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  2026-27-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்திய செமிகண்டக்டர் இயக்கம் 2.0, உபகரணங்கள், மூலப்பொருட்கள், உள்நாட்டு அறிவுசார் சொத்துரிமை, நெகிழ்வான விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, சிப் உற்பத்தியை வலுப்படுத்துகிறது.

 இந்தியாவின் உலகளாவிய புத்தாக்கக் குறியீட்டுத் தரவரிசை 2015-ல் 81-வது இடத்திலிருந்து 2025-ல் 38-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2,23,000 அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் புத்தாக்கத்தால் வழிநடத்தப்படும் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்கின்றன. டிஜிட்டல் இந்தியாவின் 11 ஆண்டு விழா என்பது வெறும் நினைவுகூரத்தக்க ஒரு மைல்கல் மட்டுமல்ல. அதுவே, இந்தியாவின் அடுத்த பத்து ஆண்டுகளுக்கான உலகளாவிய தொழில்நுட்பத் தலைமைத்துவத்துக்கான அடித்தளமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278453&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2278465) आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu , Kannada