வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா–இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தத்தின் வேகத்தை நிறுவனங்கள் மேலும் வலுப்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

இடுகை இடப்பட்ட நாள்: 27 JUN 2026 6:16PM by PIB Chennai

மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், லண்டனில் நடைபெற்ற இந்தியா–இங்கிலாந்து வர்த்தகக் கருத்தரங்கிற்குத் தலைமை வகித்தார்.  இதில் பேசிய அமைச்சர், இந்தியா–இங்கிலாந்து விரிவான பொருளாதார, வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் உருவாகும் வாய்ப்புகளை, நீடித்த வணிக வளர்ச்சியாக மாற்றுவதற்கு, இந்திய நிறுவனங்கள், இங்கிலாந்து நிறுவனங்களுடனான ஈடுபாட்டை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இரு நாடுகளின் முன்னணித் தொழில் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, இந்த ஒப்பந்தத்தை வரவேற்றனர். இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நீண்டகால முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்புகள், புத்தாக்கம், விநியோகச் சங்கிலிகள், ஆழமான பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் இந்த கருத்தரங்கில் இடம்பெற்றன.

இந்த கருத்தரங்க அமர்வுகள், இந்தியா-இங்கிலாந்து விரிவான பொருளாதார, வர்த்தக ஒப்பந்தத்தின் பின்னணியில் உள்ள வலுவான உத்வேகத்தை மீண்டும் உறுதிப்படுத்தியதோடு, அந்த ஒப்பந்தத்தை உறுதியான வர்த்தக, முதலீட்டுப் பலன்களாக மாற்றுவதற்கான இரு அரசுகளின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டையும் பிரதிபலித்தன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278448&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2278464) வருகையாளர் எண்ணிக்கை : 63
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी , Marathi , Gujarati , Telugu , Malayalam