பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தென்பகுதியில் உள்ள வளரும் நாடுகளை எதிர்காலத்தில் உலகின் எரிசக்தி மையமாக நிலைநிறுத்த இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சி குறித்த ஒரு கட்டுரையை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 JUN 2026 1:27PM by PIB Chennai

பாதுகாப்பான, மீள்திறன் கொண்ட, சமத்துவ, நீடித்த உலகளவிலான  எதிர்கால எரிசக்தி மையமாக, உலகின் தென்பகுதியில் உள்ள வளரும்  நாடுகளை நிலைநிறுத்த, இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் கட்டார் எழுதிய கட்டுரை ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.

வலுவான உள்நாட்டுக் கொள்கைகளை வடிவமைப்பது, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம், மீள்திறன் கொண்ட எரிசக்திக்கான உற்பத்தி அமைப்புகள் கட்டமைக்கப்படுகின்றன என்ற இந்தியாவின் நம்பிக்கையை அவர் அந்தக் கட்டுரையில் விரிவாக எடுத்துரைத்துள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

2026-ல் இந்தியா, பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வேளையில், பாதுகாப்பான, மீள்திறன் கொண்ட, சமத்துவ, நீடித்த உலகளவிலான எதிர்கால எரிசக்தி மையமாக உலகின் தென் பகுதியில் உள்ள வளரும் நாடுகளை நிலைநிறுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் கட்டார் குறிப்பிட்டுள்ளார்.

வலுவான உள்நாட்டுக் கொள்கைகள், சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு    மூலம், மீள்திறன் கொண்ட எரிசக்தி உற்பத்தி அமைப்புகள் கட்டமைக்கப்படுகின்றன என்ற இந்தியாவின் நம்பிக்கையை அவர் எடுத்துரைக்கிறார்.

****

(Release ID: 2278373)

TV/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2278388) வருகையாளர் எண்ணிக்கை : 47