வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேசத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ரேவா சுந்தர்ஜா மாம்பழங்கள் முதல் முறையாக ஏற்றுமதி

இடுகை இடப்பட்ட நாள்: 27 JUN 2026 10:27AM by PIB Chennai

மத்திய அரசின் வர்த்தக தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேடா (APEDA), மத்தியப் பிரதேசத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு, புவிசார் குறியீடு பெற்ற ரேவா சுந்தர்ஜா மாம்பழங்களின் முதல் வணிக ஏற்றுமதிக்கு வழிவகுத்துள்ளது. இது உலகச் சந்தைகளுக்கு இந்தியாவின் தனித்துவமான வேளாண் பொருட்களை கொண்டு செல்வதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது.

கடந்த பல மாதங்களாக, அபேடா அமைப்பானது, இந்த உயர்தர மாம்பழ ஏற்றுமதி தொடர்பாக, மத்தியப் பிரதேச அரசின் தோட்டக்கலைத் துறை, ஏற்றுமதியாளர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சர்வதேச அளவில் வாங்குபவர்கள் ஆகியோருடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது. இந்த ஒருங்கிணைந்த முயற்சிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு வாங்கும் நிறுவனத்தை அடையாளம் காண வழிவகுத்து, புகழ்பெற்ற ரேவா சுந்தர்ஜா மாம்பழத்தின் சர்வதேச சந்தைப்படுத்தலுக்கு வழி அமைத்தன.

ஒரு மெட்ரிக் டன் புவிசார் குறியீடு பெற்ற ரேவா சுந்தர்ஜா மாம்பழங்களைக் கொண்ட முதல் வர்த்தக ஏற்றுமதித் தொகுப்பு, மெசர்ஸ் சால்ட் ரேஞ்ச் ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் 2026 ஜூன் 26 அன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த மைல்கல் ஏற்றுமதியானது, ரேவா சுந்தர்ஜா மாம்பழத்தின் சர்வதேசப் பயணத்தின் தொடக்கத்தைக் குறிப்பதோடு, வரும் பருவங்களில் அதிக ஏற்றுமதிக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வணிக ரீதியான ஏற்றுமதி, ரேவா பிராந்தியத்தில் உள்ள மாம்பழ விவசாயிகளுக்கு குறிப்பிடத்தக்க பொருளாதாரப் பலன்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278340&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2278361) வருகையாளர் எண்ணிக்கை : 69
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Punjabi , Telugu