வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐஸ்லாந்தில் உள்ள இந்தியத் தூதரகமும் அபெடாவும் இணைந்து, ஐஸ்லாந்தில் முதல் முறையாக இந்திய மாம்பழ ஊக்குவிப்பு நிகழ்வுகளை நடத்தின

प्रविष्टि तिथि: 26 JUN 2026 11:29AM by PIB Chennai

ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்க்யவிக்கில்  2026 ஜூன் 24 அன்றும் வடக்கு ஐஸ்லாந்தின் அகுரேரியில் 2026 ஜூன் 25 அன்றும் ஐஸ்லாந்தில் உள்ள இந்தியத் தூதரகமும், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமும் (அபெடா) இணைந்து, இந்திய மாம்பழங்களின் வளமான பன்முகத்தன்மையையும் ஏற்றுமதித் திறனையும் வெளிப்படுத்தும் விதமாக, இந்திய மாம்பழ ஊக்குவிப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்தது. இவை ஐஸ்லாந்தில் நடத்தப்பட்ட முதலாவது இந்திய மாம்பழ ஊக்குவிப்பு நிகழ்வுகளாகும்.

இந்தியாவின் உலகப் புகழ்பெற்ற மாம்பழ ரகங்களின் தனித்துவமான குணங்களை எடுத்துரைத்த தூதர் ஆர். ரவீந்திரா,  ஐஸ்லாந்திற்கு இந்திய மாம்பழ ஏற்றுமதியை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளையும் சுட்டிக்காட்டினார்.

ஐஸ்லாந்து வெளியுறவு அமைச்சகத்தின் வர்த்தக ஒப்பந்தங்களுக்கான இயக்குநர் திரு ஸ்வெய்ன் கே. ஐனார்சன், இந்தியா–ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்கம், வர்த்தக மற்றும் பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் ஆகியவை வழங்கும் வாய்ப்புகள் பற்றியும் ஐஸ்லாந்திற்கு அதிக அளவில் இந்திய மாம்பழங்களின் இறக்குமதியை எளிதாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பேசினார்.

இந்த நிகழ்வுகளில் இறக்குமதியாளர்கள், தூதரக உறுப்பினர்கள், ஐஸ்லாந்து வணிகப் பிரதிநிதிகள், ஐஸ்லாந்து வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். விருந்தினர்களுக்கு தசேரி, சௌசா, லங்ரா, கேசர் ஆகிய நான்கு உயர்தர இந்திய மாம்பழ வகைகள் பரிமாறப்பட்டன. அவற்றின் சிறப்பான சுவை, மணம் மற்றும் தரம் விருந்தினர்களால் பெரிதும் பாராட்டப்பட்டன.

ஐஸ்லாந்து தற்போது தாய்லாந்து, பிரேசில், கம்போடியா, கானா, பெரு ஆகிய நாடுகளிலிருந்து மாம்பழங்களை முதன்மையாக இறக்குமதி செய்கிறது.  2025-ல் ஐஸ்லாந்து சுமார் 3.3 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மாம்பழங்களை இறக்குமதி செய்தது, இதில் ஏறத்தாழ 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மாம்பழங்கள் தாய்லாந்திலிருந்து மட்டும்  இறக்குமதி செய்யப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278105&reg=3&lang=1

****

TV/SMB/SH


(रिलीज़ आईडी: 2278132) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Telugu , Kannada , Malayalam