குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பவையா நாட்டுப்புற மரபு குறித்த புத்தகத்தை குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்

प्रविष्टि तिथि: 25 JUN 2026 6:12PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள குடியரசு துணைத்தலைவர் மாளிகையில், மக்களவை உறுப்பினர் டாக்டர் ஜெயந்த குமார் ராய், சங்கீதா ராய் எழுதிய புத்தகத்தை குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டார். இந்த புத்தக வெளியீடு தொடர்பான புகைப்படங்களை தனது சமூக ஊடக எக்ஸ் தள பதிவில்  அவர் பகிர்ந்துள்ளார். 

நிகழ்ச்சியில் பேசிய அவர், கோச் ராஜ்பன்ஷி சமூகத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும், பவையா நாட்டுப்புற மரபையும் முதன்மைப்படுத்தியதற்காக நூல் ஆசிரியர்களைப் பாராட்டினார். வடக்கு வங்காள மண்ணிலிருந்து உருவான பவையா இசை, பல தலைமுறைகளாக சாமானிய மக்களின் உணர்ச்சிகள், விருப்பங்கள், போராட்டங்கள், ஞானத்தை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார். பண்டைய இந்தியாவில் இசை என்பது மனித உணர்வை பிரபஞ்ச ஒழுங்குடன் இணைக்கும் வழிமுறையாகக் கருதப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நவீனமயமாக்கல், உலகமயமாக்கல் சவால்களுக்கு மத்தியிலும், மனிதர்களின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் இந்த பாரம்பரியம் இன்றும் தொடர்ந்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை நோக்கி நாடு முன்னேறி வரும் வேளையில், நாட்டின் வளர்ச்சியின் ஒருங்கிணைந்த பகுதியாக கலாச்சார பாதுகாப்பு இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நாகரிக விழிப்புணர்வுடன் கலாச்சார நம்பிக்கை இணையும் போதுதான் வளர்ச்சி அர்த்தமுள்ளதாக மாறும் என்றார்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வரிகளைக் குறிப்பிட்ட அவர், நமது தேசத்தின் பலம் அதன் துடிப்பான பன்முகத்தன்மையில் உள்ளது என்றார். பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் இருந்தாலும், நாம் அனைவரும் ஒரே நாகரிக உணர்வைப் பகிர்ந்து கொள்ளும் ஒரே தேசம் என்றும், இந்தியா எப்போதும் ஒன்றாகவே இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார். இந்த விழாவில் மாநிலங்களவைத் தலைவர் திரு ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277904&reg=3&lang=1

****

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2277999) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी