மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
प्रविष्टि तिथि:
25 JUN 2026 1:30PM by PIB Chennai
2026-ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுகளுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களையும் பரிந்துரைகளையும் மத்திய கல்வி அமைச்சகம் வரவேற்றுள்ளது. பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதிலும், மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் ஆசிரியர்களின் சிறந்த பங்களிப்பை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.
மத்திய அரசு, மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் பள்ளிகள், அங்கீகரிக்கப்பட்ட வாரியங்களின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் பணிபுரியும் தகுதியுள்ள ஆசிரியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
தேசிய விருதுகள் இணையதளத்தில் 2026 ஜூன் 15 முதல் ஜூலை 10 வரை இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இதற்கான தகுதிகள், காலக்கெடு போன்ற விவரங்கள் https://nationalawardstoteachers.education.gov.in/Login.aspx என்ற இணையதளத்தில் விரிவாக வழங்கப்பட்டுள்ளன. பள்ளி கல்வியில் அர்ப்பணிப்புடன் புதுமைகளைப் புகுத்தும் ஆசிரியர்களைக் கௌரவிக்க ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன் படி ஆசிரியர்களின் சுய பரிந்துரைகளை ஜூலை 11 முதல் 13 வரை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மீதான தேர்வுக் குழுக்களின் பரிசீலனை ஜூலை 14 முதல் 29 வரை மேற்கொள்ளப்படும். தேசிய நல்லாசிரியர் விருதுகள் செப்டம்பர் 5-ம் தேதி வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277706®=3&lang=1
***
SS/PD/RJ
(रिलीज़ आईडी: 2277912)
आगंतुक पटल : 14