பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 14 APR 2026 9:14AM by PIB Chennai

பிரதமர் நரேந்திர மோடி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

தேசத்தைக் கட்டமைப்பதில் பாபாசாகேப் அம்பேத்கர் ஆற்றிய இணையற்ற பங்களிப்புகள், தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருவதாகப் பிரதமர் கூறியுள்ளார்நீதியுடன், அனைவரையும் உள்ளடக்கிய, முற்போக்கான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காகப் பணியாற்ற, டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கையும் கொள்கைகளும் மக்களைத் தூண்டுகின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டாக்டர் அம்பேத்கரின் ஆளுமையும் பணிகளும் தேசத்தின் வளர்ச்சிக்கு என்றென்றும் வழிகாட்டும் சக்தியாக நிலைத்திருக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தையும் பகிர்ந்துள்ளார்.

உன்னதமான குணமுடையவர்களுக்கு பூமி முழுவதும் அவர்களின் குடும்பம் என அந்த ஸ்லோகம் கூறுகிறது.

பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்த தினத்தையோட்டி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளில் அவருக்கு எனது மரியாதையைச் செலுத்துகிறேன். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவரது பங்களிப்புகள் ஆழ்ந்த உத்வேகம் அளிக்கின்றன. அவரது வாழ்க்கையும் பணிகளும், நீதியுடன் கூடிய, முற்போக்கான சமூகத்தைக் கட்டியெழுப்பத் தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்குவிக்கின்றன.

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் ஆளுமையும் பணிகளும் தேசக் கட்டுமானத்திற்குத் தொடர்ந்து உத்வேகத்தின் ஆதாரமாக விளங்கும்."

****

(Release ID: 2251732)

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2277799) வருகையாளர் எண்ணிக்கை : 18