பிரதமர் அலுவலகம்
புகழ்பெற்ற மற்றும் பன்முகத் திறமை கொண்ட பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
12 APR 2026 2:20PM by PIB Chennai
பாடகி ஆஷா போஸ்லேவின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியா கண்ட மிகச் சிறந்த மற்றும் பன்முகத் திறமை வாய்ந்த குரல்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார் எனப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக நீடித்த அவரது அசாதாரணமான இசைப் பயணம், தேசத்தின் கலாச்சாரப் பாரம்பரியத்தை வளப்படுத்தியதுடன், உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற இதயங்களைத் தொட்டது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். உள்ளத்தைத் தொடும் அவரது மெல்லிசைகள் மூலமாகவும் அல்லது உயிரோட்டமான இசை மூலமாகவும் அவரது குரல் ஒரு காலத்தால் அழியாத மேன்மையைக் கொண்டிருந்தது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். அவருடனான தம்முடைய உரையாடல்களை எப்போதும் போற்றிப் பாதுகாப்பேன் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆஷா போஸ்லேவின் குடும்பத்தினர், அபிமானிகள், இசை ரசிகர்களுக்குப் பிரதமர் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவர் தலைமுறைகளுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிப்பார் என்றும், அவரது பாடல்கள் மக்களின் வாழ்வில் என்றென்றும் எதிரொலிக்கும் என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்தியா கண்ட மிகச் சிறந்த மற்றும் பன்முகத் தன்மை வாய்ந்த குரல்களில் ஒருவரான ஆஷா போஸ்லே-யின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. பல ஆண்டுகளாக நீடித்த அவரது அசாதாரணமான இசைப் பயணம், நமது கலாச்சாரப் பாரம்பரியத்தை வளப்படுத்தியதுடன், உலகெங்கிலும் எண்ணற்ற இதயங்களைத் தொட்டது. உள்ளத்தைத் தொடும் மெல்லிசையாக இருந்தாலும் சரி, உயிரோட்டமான இசையாக இருந்தாலும் சரி, அவரது குரல் காலத்தால் அழியாத மேன்மையைக் கொண்டிருந்தது. அவருடன் நான் மேற்கொண்ட உரையாடல்களை எப்போதும் போற்றிப் பாதுகாப்பேன்
அவரது குடும்பத்தினர், அபிமானிகள், இசை ஆர்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவர் தலைமுறைகளுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிப்பார். அவரது பாடல்கள் மக்களின் வாழ்வில் என்றென்றும் எதிரொலிக்கும்."
----
(Release ID: 2251254)
SS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2277695)
आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam