நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
கேந்திரிய வித்யாலயா கல்வி நிறுவனங்களுக்கான தேசிய இளையோர் நாடாளுமன்ற போட்டியின் பரிசளிப்பு விழா ஜூன் 25 அன்று நடைபெற உள்ளது
प्रविष्टि तिथि:
24 JUN 2026 10:32AM by PIB Chennai
கேந்திரிய வித்யாலயா கல்வி நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்ற 36-வது தேசிய இளையோர் நாடாளுமன்ற போட்டி 2025-26-க்கான பரிசளிப்பு விழா புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் 2026 ஜூன் 25 அன்று நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் தரு அர்ஜூன் ராம் மேக்வால், நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி பரிசுகளை வழங்குவார்.
இந்தப் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த, புதுதில்லியில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயா மாணவர்கள் இளையோர் நாடாளுமன்ற நிகழ்வை இந்த விழாவின் போது மீண்டும் நிகழ்த்திக் காட்டுவார்கள். இவர்களுக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் நாடாளுமன்ற கேடயமும், கோப்பையும் அமைச்சரால் வழங்கப்படும்.
மண்டல ரீதியான போட்டிகளில் தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா முதலிடம் பெற்றுள்ளது.
இளம் தலைமுறையினர் இடையே சுய கட்டுப்பாடு, மாறுபட்ட கருத்துகளில் சகிப்புத்தன்மை, கருத்துகளை சரியான முறையில் வெளிப்படுத்துதல், வாழ்க்கையின் ஜனநாயக விழுமியங்களை புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இளையோர் நாடாளுமன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. 2025-26-க்கான 36-வது போட்டித்தொடர் நாடு முழுவதும் 25 மண்டலங்களில் உள்ள 200 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நடைபெற்றது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277317®=3&lang=1
***
SS/SMB/RJ/KR
(रिलीज़ आईडी: 2277492)
आगंतुक पटल : 9