பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருது வழங்கும் (இரண்டாம் கட்டம்) விழாவில் பிரதமர் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 23 JUN 2026 9:29PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று  இரண்டாவது கட்ட பத்ம விருது வழங்கும் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

 

இந்த விருதுகள், பல்வேறு துறைகளில் போற்றத்தக்க சேவையையும் அர்ப்பணிப்பையும்  கொண்டாடுவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

 

விருது வென்ற ஒவ்வொருவரும், சமூகத்தின் மீதான நாட்டின் உறுதிப்பாட்டின் மிகச்சிறந்த அடையாளமாகத் திகழ்கிறார்கள் என்று திரு மோடி தெரிவித்தார்.

 

 

விருது பெற்றவர்களின் வாழ்க்கைப் பயணங்கள், எண்ணற்ற குடிமக்களுக்கு உத்வேகம் அளிப்பதுடன், கடின உழைப்பு மற்றும் சேவையின் வலிமையை அனைவருக்கும் நினைவூட்டுவதாக பிரதமர் கூறினார்.

 

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டதாவது:

 

“குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று  இரண்டாவது கட்ட பத்ம விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டேன். இந்த விருதுகள், பல்வேறு துறைகளில் போற்றத்தக்க சேவையையும் அர்ப்பணிப்பையும்  கொண்டாடுகின்றன. விருது பெற்ற ஒவ்வொருவரும், சமூகத்திற்கான நமது உறுதிப்பாட்டின் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர். அவர்களது வாழ்க்கைப் பயணங்கள், எண்ணற்ற குடிமக்களுக்கு உத்வேகம் அளிப்பதுடன், கடின உழைப்பு மற்றும் சேவையின் ஆற்றலை அனைவருக்கும் நினைவூட்டுகின்றன.

 

@PadmaAwards”

 

(Release ID: 2277271)

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2277299) வருகையாளர் எண்ணிக்கை : 43