இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தேசிய விளையாட்டு வாரியத்தின் தலைவர், உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்குமாறு மத்திய அரசு கோரியுள்ளது
प्रविष्टि तिथि:
23 JUN 2026 1:00PM by PIB Chennai
தேசிய விளையாட்டு வாரியத்தின் தலைவர், இரண்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்வுக்காக, மத்திய இளையோர் விவகாரங்கள், விளையாட்டு அமைச்சகம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம் 2025, தேசிய விளையாட்டு நிர்வாக (தேசிய விளையாட்டு வாரியம்) விதிகள் 2026 ஆகிய விதிகளின்படி இந்தத் தேர்வு நடைபெறும்.
பொது நிர்வாகம், விளையாட்டு நிர்வாகம், விளையாட்டுச் சட்டம், அது தொடர்பான பிற துறைகளில், அறிவுசார் அல்லது நடைமுறை அனுபவம் கொண்ட, திறன், நேர்மை, நற்பெயருடன் கூடிய நபர்களிடமிருந்து, 'தேசிய விளையாட்டு வாரியம் (தேடல், தேர்வுக் குழு) விதிகள், 2026',விதி 3(3)-ன் கீழ் அமைக்கப்பட்ட தேடல், தேர்வுக்கான குழுவின் பரிந்துரையின் பேரில், மத்திய அரசால் தலைவர், இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்.
தேசிய விளையாட்டு வாரியத்தின் தலைவர், உறுப்பினர்களின் நியமனம் தொடர்பான ஊதியம், பிற விதிமுறைகள், 'தேசிய விளையாட்டு நிர்வாக (தேசிய விளையாட்டு வாரியம்) விதிகள், 2026'-ன் விதிகளுக்கு உட்பட்டதாக இருக்கும்.
தேசிய விளையாட்டு அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவதிலும், நிர்வாக, நிதி, நெறிமுறை தொடர்பான தரநிலைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதிலும், தேசிய விளையாட்டு வாரியம் ஒரு மைய அதிகார அமைப்பாகச் செயல்படும்.
தகுதியுள்ள நபர்கள் https://sports.yas.gov.in/application_app என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கு 2026 ஜூலை 22 அன்று கடைசி நாளாகும்.
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276959®=3&lang=1
(Release ID: 2276959)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2277235)
आगंतुक पटल : 3