MIFF banner

19-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா: படைப்பாற்றல், அனிமேஷன் கலையின் எதிர்காலம் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது

19-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் கதைகூறல், படைப்பாற்றல், அனிமேஷன் கலையின் எதிர்காலம் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திரைப்பட இயக்குனர் த்வனி தேசாய், கலைஞர்கள் புதிய தொழில்நுட்பத்திற்கும் தங்களின் கலைக்கும் இடையே முறையான சமநிலையைக் பேண வேண்டும் என்று வலியுறுத்தினார். ஜென் பௌத்த கதையை மேற்கோள் காட்டிய அவர், கடலுக்குச் செல்பவர்கள் சிப்பிகளைச் சேகரிக்கலாம் அல்லது மணல் கோட்டைகளைக் கட்டலாம், சிலர் அங்கு ஞானத்தையும் பெறலாம் என்று குறிப்பிட்டார். திரைப்படங்களை பார்வையாளர்கள் தங்களின் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் வெவ்வேறு விதமாகப் புரிந்துகொள்வதை இது குறிக்கிறது.  

அனிமேஷன் திரைப்பட இயக்குனர் ரைமுண்ட் க்ரம்மே பேசுகையில், பார்வையாளர்கள் தங்களின் விருப்பப்படி படங்களைப் புரிந்து கொள்வதை தாம் வரவேற்பதாகத் தெரிவித்தார். ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் ஒரு திரைப்படத்தைப் புரிந்து கொள்ளும் தனித்துவமான வழிமுறை உள்ளது. சுவர்களில் ஓவியங்களை வரைந்து தனது எண்ண ஓட்டங்களை உருவாக்குவதே படைப்புச் செயல்முறையின் தொடக்கப்புள்ளி என்று அவர் பகிர்ந்து கொண்டார். செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் காலத்தில், அனிமேஷன் என்பது வெறும் நகரும் படங்கள் மட்டுமல்ல, அது பார்வையாளர்களுடன் உணர்வுபூர்வமாக இணையும் உன்னதமான கலை வடிவம் என்பதை இக்கலந்துரையாடல் வெளிப்படுத்தியது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275771&reg=1&lang=1

***

SS/PD/KR

 


Great films resonate through passionate voices. Share your love for cinema with #MIFF2026. Tag us @pibmumbai on X, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at miff.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


रिलीज़ आईडी: 2276973   |   Visitor Counter: 5