உள்துறை அமைச்சகம்
புதுதில்லியில் புதிய சிஐஎஸ்எஃப் தலைமையகத்திற்கு மத்திய இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் அடிக்கல் நாட்டினார்
प्रविष्टि तिथि:
22 JUN 2026 3:52PM by PIB Chennai
புதுதில்லியில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) புதிய தலைமையகத்திற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் சிஐஎஸ்எஃப்-பின் ரூ.136.03 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை அவர் தொடங்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், மத்திய ஆயுத காவல்படையினர், அவர்களது குடும்பத்தினர் நலனில் அரசின் அர்ப்பணிப்பை உறுதிபடுத்தினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழும், மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழும் கட்டணமில்லா சுகாதார வசதிகள், வெளிப்படையான வீட்டுவசதி ஒதுக்கீடு மூலம், மத்திய ஆயுத காவல்படையினரின் நலனுக்காக பல்வேறு முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். மனநல ஆதரவுத் திட்டம், நிதியுதவி போன்ற முன்முயற்சிகளை திரு பண்டி சஞ்சய் குமார் பாராட்டினார்.
பின்னர் பேசிய சிஐஎஸ்எஃப் தலைமை இயக்குநர் திரு பிரவீர் ரஞ்சன், வளர்ந்துவரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் பாதுகாப்புப் படையினரின் தயார் நிலை குறித்தும், பாதுகாப்பு சவால்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276623®=3&lang=1
***
SS/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2276787)
आगंतुक पटल : 6