பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

யோகா மற்றும் ஆரோக்கியமான முதுமை குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 21 JUN 2026 12:41PM by PIB Chennai

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் எழுதிய கட்டுரை ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இக்கட்டுரை, யோகாவையும் மனித நலனில் அது ஏற்படுத்தும் ஆழமான தாக்கத்தையும் எடுத்துரைக்கிறது என பிரதமர் கூறியுள்ளார். இந்த ஆண்டின் கருப்பொருளான “ஆரோக்கியமான முதுமைக்கான யோகா” என்பதைக் குறிப்பிட்டு, தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட அறிவின் அடிப்படையில், யோகப் பயிற்சிகள், மூத்த குடிமக்களுக்கு ஏற்ற மென்மையான, எளிதில் அணுகக்கூடிய நெறிமுறைகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்று அது குறிப்பிடுவதாக திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

யோகாவை இந்தியா உலகிற்கு அளித்த கொடையாக முன்னிலைப்படுத்தும் இக்கட்டுரை, யோகாவை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு கலாச்சார, நல்வாழ்வுப் பயிற்சியாக அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், யோகாவையும் மனித நலனில் அது ஏற்படுத்தும் ஆழமான தாக்கத்தையும் எடுத்துரைத்துள்ளார். இந்த ஆண்டின் கருப்பொருளான “ஆரோக்கியமான முதுமைக்கான யோகா” என்பதைக் குறிப்பிட்டு, தனது தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து யோகப் பயிற்சிகள், மூத்த குடிமக்களுக்கு ஏற்ற மென்மையான, எளிதில் அணுகக்கூடிய நெறிமுறைகளாகச் சிந்தனையுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிடுகிறார்.

யோகாவை இந்தியா உலகிற்கு அளித்த கொடையாகச் சுட்டிக்காட்டி, அதனை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு கலாச்சார மற்றும் நல்வாழ்வுப் பயிற்சியாக அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்."

****

(Release ID: 2276005)

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2276276) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Gujarati , Telugu , Malayalam