மும்பை சர்வதேசத் திரைப்பட விழாவில், காலத்தால் அழியாத கிளாசிக் ‘ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட்’ திரைப்படம் திரையிடப்பட்டது
19-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில், பன்முக நிகழ்ச்சிகளில் பழம்பெரும் அனிமேஷன் கிளாசிக் திரைப்படமான ‘ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட்’-திரைப்படம் திரையிடப்பட்டது. கடந்த கால நினைவுகள், கற்பனை, வியப்பு ஆகிய அம்சங்கள் இந்த திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்தத் திரையிடல், விழா பார்வையாளர்களுக்கு தலைசிறந்த படைப்பை பெரிய திரையில் அனுபவிக்க ஒரு அரிய வாய்ப்பை வழங்கியது.
லூயிஸ் கரோலின் எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘ஆலிஸின் அட்வென்ச்சர்ஸ் இன் வொண்டர்லேண்ட்’-ஐ அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படத்தை, தொலைநோக்குப் பார்வை கொண்ட வில்ஃபிரட் ஜாக்சன், கிளைட் ஜெரோனிமி மற்றும் ஹாமில்டன் லஸ்கே ஆகியோர் இயக்கியுள்ளனர். அனிமேஷன் உலகின் என்றும் நிலைத்திருக்கும் கிளாசிக் படைப்புகளில் ஒன்றாகப் பரவலாகக் கருதப்படும் இத்திரைப்படம், காலத்தால் அழியாத இலக்கியத்தை எவ்வாறு ஒரு சிறந்த பொழுதுபோக்கு சினிமா அனுபவமாக மாற்ற முடியும் என்பதை நிரூபிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275671®=3&lang=1
(Release ID: 2275671)
****
TV/SV/SH
रिलीज़ आईडी:
2275809
| Visitor Counter:
12