MIFF banner

தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையிலும் திரைப்பட விழாக்களின் ஆன்மா எவ்வித மாற்றமுமின்றி இருக்கும்: மும்பை சர்வதேசத் திரைப்பட விழாவில் நிபுணர்கள் கருத்து

ஸ்ட்ரீமிங் தளங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், பார்வையாளர்களின் மாறிவரும் ரசனைகள் ஆகியவை திரைப்படத் துறையின் சூழலை மாற்றியமைத்து வருகிறது.

புதியவற்றைக் கண்டறிதல், கற்றல்,  கூட்டு அனுபவத்தைப் பெறுதல் ஆகியவற்றுக்கான இடங்களாகத் திரைப்பட விழாக்கள் தொடர்ந்து  முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்திய ஆவணப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அமர்வில், தொழில்நுட்பம் பார்வையாளர்களின் ஈடுபாட்டை எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதையும், அதே வேளையில் திரைப்பட விழாக்களின் நிலையான மதிப்பைச் சோதிப்பது குறித்தும் விவாதிக்கத் திரைப்பட விழாத் துறை சார்ந்த அனுபவமிக்க நிபுணர்களை ஒன்றிணைத்துள்ளது.

இந்த விவாதத்தில் பெங்களூரு சர்வதேசத் திரைப்பட விழாவின் நிறுவனர், முன்னாள் கலை இயக்குநரான வித்யாசங்கர், இந்திய ஹேபிடேட் மைய இயக்குநர் பேராசிரியர் (டாக்டர்) கே.ஜி. சுரேஷ், திரைப்பட விமர்சகரும் விழா ஆலோசகருமான பிரமேந்திர மஜும்தார்,  புனே சர்வதேசத் திரைப்பட விழாவின் முக்கியப் பொறுப்பாளரான அதிதி அக்கல்கோட்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275665&reg=3&lang=1

(Release ID: 2275665)

****

TV/SV/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #MIFF2026. Tag us @pibmumbai on X, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at miff.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


रिलीज़ आईडी: 2275768   |   Visitor Counter: 9