ஆயுஷ்
azadi ka amrit mahotsav

சர்வதேச யோகா தினத்தையொட்டி, நாடு தழுவிய கொண்டாட்டங்களில் இணையுமாறு மத்திய ஆயுஷ் அமைச்சகம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது

प्रविष्टि तिथि: 20 JUN 2026 2:09PM by PIB Chennai

சர்வதேச யோகா தினம் ஜூன் 21 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், சுகாதாரம், நல்லிணக்கம், இந்தியாவின் காலத்தால் அழியாத யோகா பாரம்பரியம் ஆகியவற்றைக் கொண்டாடும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

2026-ம் ஆண்டிற்கான சர்வதேச யோகா தினத்தின் முக்கிய நிகழ்வு, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில், கொல்கத்தாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'ரெட் ரோட்' பகுதியில் ஜூன் 21 அன்று நடைபெற உள்ளது என்றும், இதில், 'பொது யோகா நெறிமுறைகளை கடைப்பிடிக்கவும், யோகா குறித்த செய்தியை உலகிற்குப் பகிரவும் ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணையும் என்றும் மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு. பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் மக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அவர், இந்த ஆண்டு, இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், காலத்தால் அழியாத யோகா பாரம்பரியம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் வகையில், மத்திய கலாச்சார அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள 100 முக்கிய இடங்களில், சிறப்பு யோகா தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது என்று கூறினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் ஒரு பகுதியாக, 2026-ம் ஆண்டிற்கான சர்வதேச யோகா தினத்தை, மறக்க முடியாத, வெற்றிகரமான கொண்டாட்டமாக மாற்றுவதற்காக, உற்சாகத்துடனும் பங்கேற்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நாகரிக பாரம்பரியத்திற்கும் பண்டைய யோகா பயிற்சிக்கும் இடையேயான தனித்துவத் தொடர்பை முன்னிலைப்படுத்தும் வகையில், இந்த ஆண்டு மத்திய கலாச்சார அமைச்சகம், நாடு முழுவதும், 100 முக்கிய இடங்களில் சர்வதேச யோகா தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275609&reg=3&lang=1

(Release ID: 2275609)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2275661) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Telugu , Kannada , Malayalam , English , Urdu , हिन्दी , Gujarati