கதை சொல்லியாக மாறும் தொழில்நுட்பம்: மும்பை திரைப்பட விழாவில் ஏஐ திரைப்படங்கள் புதிய எல்லைகளைத் திறக்கின்றன
19-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா 2026-ல், "செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திரைப்படங்கள்" என்ற பிரிவின் கீழ், திரைப்படப் புத்தாக்கத்தின் உணர்வுகள் கொண்டாடப்பட்டன. கதைசொல்லல், தொழில்நுட்பம், கற்பனை ஆகியவற்றின் சங்கமத்தை ஆராய்ந்த இத்திரைப்படங்கள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) எவ்வாறு ஒரு சக்திவாய்ந்த புதிய படைப்புக் கருவியாகச் செயல்படுகிறது என்பதை நிரூபித்தன. இது, உலகெங்கிலும் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர்களை வரலாறு, புராணம், தனிப்பட்ட நினைவுகள், திரைப்பட எல்லைகள் ஆகியவற்றைத் தாண்டிய சிக்கலான கதைகளை ஆராய வழிவகுக்கிறது.
வரலாற்றுப் போர்களைப் பற்றிய கதைகளைச் சித்தரிப்பதாக இருந்தாலும், தனித்துவமான அனிமேஷன்களைப் பயன்படுத்துவதாக இருந்தாலும், அல்லது ஒரு படைப்பாளியின் மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆழமாக ஆராய்வதாக இருந்தாலும், செயற்கை நுண்ணறிவு மனிதனின் படைப்பாற்றலுக்கு மாற்றாக வரவில்லை என்பதை இந்தப் படங்கள் காட்டின. மாறாக, அது திரைப்படங்களை உருவாக்குபவர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த புதிய கருவியை வழங்குகிறது.
தீபக் விஜய் இயக்கிய, தனித்துவமான திரைப்படமான "லெஜண்ட்ஸ் – தி எடர்னல் ஃபிளேம் ஆஃப் மேவார்"-ல், ஒருவர் ஆரவல்லி மலைகள் முழுவதும் பாடல்கள் மூலம் ஒரு ராஜ்ஜியத்தைச் சித்தரிக்கிறார்.
லாரன்ட் கிளிகேயின் "தி ஸ்கிரீன்ரைட்டர்" என்பது, ஒரு எழுத்தாளரின் அழுத்தமான மனதிற்குள் ஆழமாகச் சென்று, படைப்புச் செயல்முறையின் உளவியல் போராட்டங்களை ஒரு குறுகிய கண்ணோட்டத்தைப் பயன்படுத்தி ஆராயும் ஒரு தனிநிகழ்ச்சியாகும்.
ஷுவான் லியின் "தி ஸ்டார் ஷெப்பர்ட்" என்ற அனிமேஷன் இசைக் காணொலி, ஒரே வானத்தின் கீழ் அந்நியர்களை அன்பு எவ்வாறு இணைக்கிறது என்பதை அழகாக விளக்குகிறது.
இந்தத் திரைப்படங்கள் மும்பை சர்வதேச திரைப்பட விழாவுக்கு வருகை தந்த திரைப்பட ஆர்வலர்களுக்கு சர்வதேச திரைப்படத் தயாரிப்பின் எதிர்காலம் குறித்த ஒரு குறிப்பிடத்தக்க பார்வையை வழங்கின. மேலும், திரைப்படங்களில் செயற்கை நுண்ணறிவு நாளுக்கு நாள் வளர்ந்து வரும்போது, அதன் மூலம் பெறப்படும் விளைவானது ஆழமான கதைகளுக்கு உயிரோட்டம் அளிக்க முடியும் என்பதையும் நிரூபித்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275593®=3&lang=1
Release ID: 2275593
****
TV/PLM/SH
रिलीज़ आईडी:
2275641
| Visitor Counter:
6