பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மேற்கு வங்க மாநிலம் உதயமான தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பங்களிப்பை நினைவு கூர்ந்தார்

प्रविष्टि तिथि: 20 JUN 2026 8:30AM by PIB Chennai

மேற்கு வங்க மாநிலம் உதயமான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இலக்கியம், இசை, கலை, ஆன்மீகம், அறிவியல், வர்த்தகம், வர்த்தகம், சமூக சீர்திருத்தம் உள்ளிட்ட பிற துறைகளில் வழங்கியுள்ள பங்களிப்புகள் மூலம் இந்தியாவின் வரலாற்றை ஆழமாக வடிவமைத்த ஒரு மாநிலத்தின் சிறப்பைப் போற்றும் வகையில் இத்தினம் கொண்டாடுகிறது என்று பிரதமர் கூறியுள்ளார். எண்ணற்ற வழிகளில் நாட்டின் மீதான தேசிய உணர்வை மேற்கு வங்க மாநிலம்  வளப்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்கம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகத் தொடர்வதை உறுதி செய்த தினம்  என்பதால், மேற்கு வங்க வரலாற்றில் ஜூன் 20-ம் தேதிக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளதாக திரு மோடி தெரிவித்தார். இதில் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பங்களிப்பு விலைமதிப்பற்றது என்று கூறிய பிரதமர், 2026-ம் ஆண்டு டாக்டர் முகர்ஜியின் 125-வது பிறந்த ஆண்டு என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் கனவுகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு, அம்மாநில இணைந்து செயல்படும் என்று பிரதமர் கூறினார்.

மேற்கு வங்க மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகவும், அம்மாநில மக்களின் வளத்திற்காகவும் திரு மோடி பிரார்த்தனை செய்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"மேற்கு வங்க மாநிலத்தின் உதய தினத்தை முன்னிட்டு, அம்மாநிலத்தில்  உள்ள எனது சகோதர, சகோதரிகளுக்கு அன்பார்ந்த வாழ்த்துகள்.

இலக்கியம், இசை, கலை, ஆன்மீகம், அறிவியல், வர்த்தகம், சமூக சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வழங்கியுள்ள பங்களிப்புகள் மூலம், இந்தியாவின் வரலாற்றை ஆழமாக வடிவமைத்த ஒரு மாநிலத்தை இத்தினம் கொண்டாடுகிறது. பலமுறை, எண்ணற்ற வழிகளில் மேற்கு வங்க மாநிலம் நாட்டின் தேசிய உணர்வை வளப்படுத்தியுள்ளது.

இன்று, ஜூன் 20-ம் தேதி மேற்கு வங்க மாநிலத்தின் வரலாற்றில், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும். மேற்கு வங்கம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகத் தொடர்வதை உறுதி செய்த தினம் இது. இதில் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பங்களிப்பு  விலைமதிப்பற்றது. இந்த ஆண்டு, அதாவது 2026-ல், டாக்டர் முகர்ஜியின் 125-வது பிறந்த ஆண்டையும் நாம் கொண்டாடுகிறோம்.

மக்களின் கனவுகளையும், விருப்பங்களையும் நிறைவேற்ற மத்திய அரசு அம்மாநில அரசுடன் இணைந்து செயல்படும். மேற்கு வங்க மாநிலத்தின்  முன்னேற்றத்திற்காகவும், மக்களின் வளத்திற்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்."

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275552&reg=3&lang=1

(Release ID: 2275552)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2275611) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , Marathi , English , Urdu , हिन्दी , Assamese , Bengali , Gujarati , Telugu , Kannada