19-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா: புகழ்பெற்ற புகைப்பட, இசைக் கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன
19-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் அஞ்சலி செலுத்தும் பிரிவில் இரு புகழ்பெற்ற ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. புகைப்படம், சினிமா, பாரம்பரிய இசைத் துறைகளில் சாதனை படைத்த மேதைகளுக்குக் மரியாதை செலுத்தும் விதமாக இவை அமைந்தன.
சுவேந்து சாட்டர்ஜி இயக்கிய 'ரகு ராய்: ஹியரிங் த்ரூ தி ஐஸ்' என்ற ஆவணப்படம், உலகப் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் ரகு ராயின் வாழ்வையும் அவரது கலைப் பயணத்தையும் விவரித்தது. அன்னை தெரசா, தாஜ்மஹால் உள்ளிட்ட இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் அவரது புகழ்பெற்ற புகைப்படங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டன.
ஷியாம் பெனகல் இயக்கிய 'தாளா அண்ட் ரிதம் - மிருதங்கம் பிளேய்ட் பை பாலக்காடு ரகு' என்ற மற்றொரு திரைப்படம், கர்நாடக இசையின் முக்கிய வாத்தியமான மிருதங்கத்தின் சிறப்புகளைப் பதிவு செய்தது. மிருதங்க மேதை பாலக்காடு ரகுவின் விரல் அசைவுகள், குரு-சீடர் பாரம்பரியத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை இப்படம் பார்வையாளர்களுக்கு விளக்கிக் காட்டியது. இந்தத் திரையிடல்கள் மத்திய கலை, கலாச்சார பாரம்பரியத்தின் மீதான ஈர்ப்பை ஆழப்படுத்தும் விதமாக இருந்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275102®=3&lang=1
****
TV/PD/SH
रिलीज़ आईडी:
2275391
| Visitor Counter:
8