திரைப்படம் என்பது காட்சியமைப்புகளை சரியாக தொகுப்பதில் அமைந்துள்ளது- ஃபெட்ரிகோ அட்டஹோர்துவா
திரைப்படத் தொகுப்புக் குறித்த சிறப்பு பயிலரங்கு மும்பை சர்வதேச திரைப்படவிழாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குநரான ஃபெட்ரிகோ அட்டஹோர்துவா, திரைப்படத் தொகுப்புக் குறித்த பல்வேறு சிறப்பு அம்சங்களை விரிவாக எடுத்துரைத்தார். இந்த அமர்வு பார்வையாளர்களிடையே திரைப்படத் தொகுப்புக் குறித்த சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
பிரோடெக்னியா ஃபாரன்சிக் போன்ற விருதுகளை வென்றுள்ள ஆவணப்படங்களை இயக்கிய அனுபவங்களை திரு ஃபெட்ரிகோ பகிர்ந்து கொண்டார். திரைப்படத்துறையில் பாரம்பரியமாக மாண்டேஜ் என்றழைக்கப்பட்ட திரைப்படத் தொகுப்பு என்பது காட்சிகள் மற்றும் ஒலியை இணைக்கும் தொழில்நுட்பமாக மட்டுமின்றி, வரலாறு, உணர்வுகள், எதார்த்த நிலை ஆகியவற்றை பார்வையாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கும் அர்த்தமுள்ள செயல்பாடு என்று அவர் குறிப்பிட்டார். பழைய கிளாசிக் வகை திரைப்படங்கள் கதைக் களத்திற்கான காரணங்கள் மற்றும் விளைவுகளை பெரிதும் நம்பியிருந்தன. இருப்பினும் இரண்டாம் உலகப் போரின் உண்மையான துன்பங்களுக்கு பிறகு திரைப்படத்துறை பெரும் மாற்றத்தைக் கண்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2275261®=3&lang=1
***
TV/SV/KPG/SH
வெளியீட்டு அடையாள எண்:
2275382
| Visitor Counter:
41