பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்ற திரு நிதீஷ் குமாருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 10 APR 2026 2:07PM by PIB Chennai

மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்ற திரு நிதீஷ் குமாருக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

திரு நிதீஷ் குமார், நாட்டின் மிகவும் அனுபவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவர் என்றும், நல்லாட்சிக்கான அவரது அர்ப்பணிப்பும், பீகாரின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய நிலையான பங்களிப்பும் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அவர், நாடாளுமன்றத்திற்குத் திரும்புவதைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்ட திரு மோடி, ஒரு மூத்த சட்டமன்ற உறுப்பினராகவும் முன்னாள் மத்திய அமைச்சராகவும் அவரது பரந்த அனுபவம் சபையின் கண்ணியத்தை கணிசமாக உயர்த்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2250727&reg=3&lang=1

----

(Release ID: 2250727)

SS/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2275161) வருகையாளர் எண்ணிக்கை : 35