வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா, இங்கிலாந்து இடையே விரிவான பொருளாதார, வர்த்தக ஒப்பந்தமும், சமூகப் பாதுகாப்பு பங்களிப்புகள் தொடர்பான ஒப்பந்தமும், 2026 ஜூலை 15 அன்று நடைமுறைக்கு வருகின்றன
प्रविष्टि तिथि:
17 JUN 2026 8:47PM by PIB Chennai
இந்தியாவின் உலகளாவிய பொருளாதார செயல்பாட்டில் ஒரு முக்கிய மைல்கல்லாக, 'விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம்' 2026 ஜூலை 15-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று இந்தியாவும் இங்கிலாந்தும் அறிவித்துள்ளன. இது நாட்டின் பொருளாதார ராஜதந்திரத்தில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. அதேவேளையில், 'இரட்டைப் பங்களிப்பு ஒப்பந்தம்' என்றும் அழைக்கப்படும் சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தமும் 2026 ஜூலை 15 அன்று நடைமுறைக்கு வரவுள்ளது. இது இங்கிலாந்தில் இந்தியத் தொழில் வல்லுநர்களின் பணிசார் இடப்பெயர்வு, போட்டித்தன்மையை வலுப்படுத்தும். மேலும், இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் விலக்குக் கால அளவு 3 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் தற்காலிகப் பணியாளர்களுக்குக் கிடைத்துள்ள ஒரு முக்கிய நன்மையாகும்.
வளர்ச்சியடைந்த இந்தியா 2047 என்ற தேசிய தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இந்த முக்கிய மைல்கல் ஒரு அதிநவீன, சமச்சீரான பொருளாதாரக் கட்டமைப்பைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவரும். இது கொள்கை முடிவுகளை, ஒரு முக்கிய உலகப் பொருளாதாரத்துடனான நேரடி, அன்றாட வர்த்தக நடவடிக்கைகளாக மாற்றியமைக்கும்.
இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், "2026 ஜூலை 15-ஆம் தேதியன்று சிஇடிஏ, இரட்டைப் பங்களிப்பு ஒப்பந்தம் ஆகியவை ஒரே நேரத்தில் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் 99% கட்டண வரிகளுக்கு உடனடி வரிவிலக்கு அணுகலைப் பெற்று, நீண்டகாலமாக இருந்து வந்த வரித் தடைகளை முறையாக அகற்றியுள்ளோம். இது ஒரு சமமான போட்டிச் சூழலை உருவாக்கி, ஜவுளி, தோல், கடல்சார் பொருட்கள், பொறியியல், பதனப்படுத்தப்பட்ட உணவு ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் எந்தவிதப் பின்னடைவும் இன்றி போட்டியிடவும், தங்கள் உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளை வழங்கவும் வழிவகுக்கும்.
முக்கியமாக, இந்த அமைப்பு முழுமையான பொருளாதாரப் பாதுகாப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது; இறக்குமதிச் சந்தையின் ஏற்ற இறக்கங்களிலிருந்து நமது உணர்திறன் மிக்க விவசாய, கிராமப்புறப் பொருளாதாரங்களைப் பாதுகாப்பதற்காக, கடுமையான விலக்குப்பட்டியல்கள் தீவிரமாகச் செயல்படுத்தப்படுகின்றன. அதேவேளையில், நமது தொழில் வல்லுநர்களுக்கு இரட்டை காப்பீட்டுப் பங்களிப்புகளிலிருந்து விலக்கு அளிப்பதன் மூலம், அவர்களின் நிதிசார் நலன்களையும் பாதுகாக்கிறோம். இந்த இரட்டை முன்முயற்சி, உள்நாட்டுத் துறையின் முக்கிய நலன்களை உறுதியாகப் பாதுகாப்பதுடன், உலகளாவிய வணிகச் செயல்பாடுகளையும் தீவிரமாக விரிவுபடுத்துகிறது” என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274280®=3&lang=1
***
SS/RB/RJ
(रिलीज़ आईडी: 2275142)
आगंतुक पटल : 35