பாதுகாப்பு அமைச்சகம்
நாக்பூரில் உள்ள யந்த்ரா இந்தியா நிறுவனத்தில் 10,000 டன் அலுமினியம் வடிவமைப்பு அச்சு உருவாக்க நிறுவனத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ளார்
प्रविष्टि तिथि:
18 JUN 2026 10:50AM by PIB Chennai
மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள அம்பாஜாரியில் அமைந்துள்ள யந்த்ரா இந்தியா லிமிடெட் ஆயுதத் தொழிற்சாலையில், அதிநவீன 10,000 டன் அலுமினியம் வடிவமைப்பு அச்சு உருவாக்க நிறுவனத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2026 ஜூன் 19 அன்று அடிக்கல் நாட்டவுள்ளார். இவ்விழாவில் மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறை செயலாளர் திரு சஞ்சீவ் குமார் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள்.
இந்த உத்தேச வடிவமைப்பு அச்சு உருவாக்க நிறுவனம், பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறைக்கு முக்கியமான தேசிய சொத்தாக அமையும். மேலும், பாதுகாப்பு, விண்வெளித் துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பெரிய, அதிக வலிமை கொண்ட, துல்லியமான அலுமினியக் கலப்புலோக வடிவமைப்பு அச்சுகளை உற்பத்தி செய்யும் திறனை வலுப்படுத்தும். இந்தத் திட்டம், முக்கியமான அலுமினிய வடிவமைப்பு அச்சு மூலம் செய்யப்பட்ட பாகங்களின் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையின் கீழ் உள்நாட்டு உற்பத்திக்கும் உதவும்.
***
(Release ID: 2274397)
SS/SMB/SH
(रिलीज़ आईडी: 2274816)
आगंतुक पटल : 9