பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரான்ஸ் நாட்டின் ஏவியன் நகரில் ஜி7 உச்சிமாநாட்டில் “அனைவருக்குமான சமநிலைமிக்க, பகிரப்பட்ட, நீடித்த பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுத்தல்” என்ற அமர்வில் பிரதமர் உரையாற்றினார்

प्रविष्टि तिथि: 18 JUN 2026 5:00AM by PIB Chennai

பிரான்ஸ் நாட்டின் ஏவியன் நகரில் ஜி7 உச்சிமாநாட்டில் “அனைவருக்குமான சமநிலைமிக்க, பகிரப்பட்ட, நீடித்த பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுத்தல்” என்ற அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி  உரையாற்றினார்.

பகிரப்பட்ட, நீடித்த வளர்ச்சிக் குறித்து இம்மாநாட்டில் அக்கறை செலுத்துவது குறித்து பாராட்டுத் தெரிவித்த பிரதமர், உலக நாடுகள் நிச்சயமற்ற சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில், நீடித்த வளர்ச்சி என்ற செய்தி, உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளும் என்று தெரிவித்தார். வளர்ச்சி என்பது வெறும் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பானது பற்றியோ அல்லது வர்த்தக புள்ளி விவரங்களாகவோ இருக்கக் கூடாது என்று தெரிவித்த அவர்,  இது மக்களின் உள்ளடக்கிய, நலன் குறித்த உண்மையான தாக்கமாக இருக்க வேண்டும் என்று கூறினார். இது தொடர்பாக “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரது நம்பிக்கை, அனைவரது முயற்சி” என்ற கொள்கைகளின் அடிப்படையில் அமைந்த இந்தியாவின் உள்ளடக்கிய வளர்ச்சிப் பயணம் குறித்து அவர் எடுத்துரைத்தார்.

உள்ளடக்கிய வளர்ச்சி என்ற இந்திய மந்திரம், அதன் சர்வதேச ஈடுபாட்டிற்கும் வழிகாட்டியாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கருப்பொருளுடன் இது ஜி20  தலைமைத்துவத்தில் பிரதிபலித்ததாக சுட்டிக்காட்டினார். விநியோக முறைகளை வலுப்படுத்துவதற்கும் முதலீடு, வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் புதுமை கண்டுபிடிப்புகளை வளர்க்கவும் இந்திய மத்திய கிழக்கு ஐரோப்பி பொருளாதார வழித்தடம் திட்டமும் இதே அணுகு முறையில் அமைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

நெருக்கடிகளும் மோதல்களும் வளரும் நாடுகள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், அவற்றை எதிர்கொள்வதற்கு சர்வதேச அளவிலான ஒற்றுமை தேவை என்று வலியுறுத்தினார். வளரும் நாடுகளின் பொருளாதார ரீதியிலான மீள்திறனுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலான வழிமுறைகளை சர்வதேச நிதி அமைப்புகள் உருவாக்க வேண்டும் என்று அவர் கருத்துத் தெரிவித்தார்.

இந்திய மத்திய கிழக்கு ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் போன்று ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, பசிபிக் தீவு நாடுகளை இணைக்கும் போக்குவரத்துத் திட்டம் குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். இந்தத் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க ஜி7 நாடுகளின் மூலதனம் இந்தியாவின் திறன்மிக்க, வளரும் நாடுகளின் உரிமை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில், போக்குவரத்து வர்த்தகத்தை விரைவுபடுத்துவதற்கான சர்வதேச ஒருங்கிணைப்புக் கூட்டாண்மையை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் கருத்து தெரிவித்தார்.

நீடித்த, நம்பத்தகுந்த, வளமையான உலக பொருளாதாரத்தை உருவாக்குவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், ஒருங்கிணைப்பு கூட்டாண்மை, பகிரப்பட்ட வளர்ச்சி ஆகியவற்றின் மீதான நம்பிக்கை ஜி7 உறுப்பு நாடுகள், பல்வேறு இதர நாடுகள் ஆகியவற்றுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு உத்வேகம் அளிப்பதாக இருந்தது என்று குறிப்பிட்டார்.

***

(Release ID: 2274370)

SS/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2274813) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam