19-வது மும்பை சர்வதேச திரைப்படவிழாவில் இந்தியாவின் பல்வேறு கதாபாத்திரங்களைப் பிரதிபலிக்கும் இளம் இயக்குநர்கள்
19-வது மும்பை சர்வதேச திரைப்படவிழாவின் வளர்ந்து வரும் குரல்கள் : திரைப்படப் பள்ளி பதிப்பு என்ற பிரிவு இளம் இயக்குநர்களின் பார்வையில் உலகைக் காண்பதற்கான சிறந்த வாய்ப்பை பார்வையாளர்களுக்கு வழங்கியுள்ளது. ஃபிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் முன்னணி திரைப்படக் கல்லூரிகளின் படங்களுடன் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களைச் சேர்ந்த 27 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
இத்திரைப்படங்கள் இந்தியாவின் மக்கள், கலாச்சாரம், வாழ்வியல் அனுபவங்களின் பன்முகத்தன்மையை அழகாகப் பிரதிபலிக்கின்றன. அடையாளம், பண்பாடு, குடும்பம், சமூகப் பிரச்சனைகள், நம்பிக்கை, மீண்டெழக்கூடிய திறன், மனித உறவுகள் என்று பல்வேறு தலைப்புகளில் திரையிடப்படுகின்றன.
இப்பிரிவில், புனேயில் உள்ள மத்திய திரைப்படக் கல்லூரியின் 4 படங்கள், கொல்கத்தாவில் உள்ள சத்யஜித் ரே திரைப்படக்கல்லூரியின் 3 படங்கள், தமிழ்நாட்டின் ஆரோவில் திரைப்பட நிறுவனத்தின் 4 படங்கள், கர்நாடகாவின் ஆர்வி பல்கலைக்கழகத்தின் 4 படங்கள், மும்பையின் விஸ்லிங் வுட்ஸ் இண்டர்நெஷனல் நிறுவனத்தின் 3 படங்கள், அசாமின் டாக்டர் பூபேன் அசாரிகா அரசு திரைப்பட நிறுவனத்தின் 2 படங்கள், கட்டாக்கின் பிஜூ பட்நாயக் திரைப்படக்கல்லூரியின் ஒரு படம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274649®=3&lang=1
****
TV/IR/KPG/SH
रिलीज़ आईडी:
2274799
| Visitor Counter:
6