மும்பை சர்வதேச திரைப்படவிழா இளம் இயக்குநர்களுக்கு பெரும் வாய்ப்பாகும் – ஃபிரெஞ்ச் இயக்குநர் ஃபேஸ் கரீம்பூர்
மும்பை சர்வதேச திரைப்படவிழாவில், ஃபிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற தேசிய திரைப்பட பள்ளியான லா ஃபெமிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்களின் 7 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. வளர்ந்து வரும் குரல்கள்: திரைப்பட பள்ளிப் பதிப்புகள் என்ற பிரிவின் கீழ் திரையிடப்பட்ட இத்திரைப்படங்கள், அடுத்த தலைமுறை ஃபிரெஞ்ச் இயக்குநர்களின் ஆக்கப்பூர்வமான கற்பனை வளத்தை விழா பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்துவதாக அமைந்தன.
இந்தத் தேர்வில், ஃபேஸ் கரீம்பூர் இயக்கிய தி அவேக்னிங் என்ற 8 நிமிட குறும்படமும் அடங்கும். பள்ளி ஆண்டுவிழாவின் போது இறுதி மேடை நாடகத்தில் நடிக்கவுள்ள சிறுவனைப் பற்றிய கதை இது. மேடை பயம் காரணமாக அவனது ஒப்பனை கலைகிறது. அதைச் சரி செய்ய அங்கிருந்து வெளியேறுகிறான். அந்த ஓட்டம் அவனுக்கு பள்ளிக்குள்ளும் வெளியேயும் ஒரு புதிய தேடலாகவும் அனுபவமாகவும் மாறுகிறது. இந்த அனுபவம் படிப்படியாக அவனது தன்னம்பிக்கையை மீட்டு தாம் ஓடிவந்த மேடையை மீண்டும் எதிர்கொள்ளும் துணிச்சலைத் தருகிறது.
அப்போது பேசிய இயக்குநர் ஃபேஸ், தங்களைப் போன்ற இளம் இயக்குநர்களுக்கு மும்பை சர்வதேச திரைப்படவிழாவில் படம் திரையிடப்படுவது மிகப் பெரும் வாய்ப்பு என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274540®=3&lang=1
****
TV/IR/KPG/SH
வெளியீட்டு அடையாள எண்:
2274791
| Visitor Counter:
41