19-வது மும்பை சர்வதேச திரைப்படவிழாவில் வேவ்ஸ் ஆவணப்பட நிகழ்வின் 2-வது பதிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது
19-வது மும்பை சர்வதேச திரைப்படவிழாவில் ஆவணப்பட இயக்குநர்கள், உலகம் முழுவதும் உள்ள ஆலோசகர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழில்துறை நிபுணர்களுடன் இணைவதற்கான முக்கிய தளமான வேவ்ஸ் ஆவணப்பட நிகழ்வின் 2-வது பதிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது.
3 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வில், திரைப்படத் திட்டங்கள் விளக்கக் காட்சிகள், தொழில்துறை கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட இயக்குநர்கள், தங்களுடைய ஆவணப்படங்களின் படைப்பு, தயாரிப்புக்குப் பிந்தைய பணி, விநியோகத்திற்கான ஆதரவைப் பெறும் வாய்ப்புகள் அமைந்தது.
இந்த நிறைவு விழாவின் போது நம்பிக்கைக்குரிய ஆவணப்படத்திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விருதுகளில் ஒன்றான பிரசாத் லேப்ஸ் விருதுகளை அதன் பொது மேலாளர் திரு நிதின் பிங்ளே வழங்கினார். தேர்வு செய்யப்பட்ட படங்களுக்கு பிரசாத் லேப்ஸ் (சென்னை) சார்பில் 50 மணி நேரம் வரை கட்டணமில்லாமல் 4K டிஜிட்டல் இண்டர்மீடியட் சேவைகள் தயாரிப்புக்குப் பிந்தைய பணி ஆதரவாக வழங்கப்படுகிறது.
இதன் வெற்றியாளர் ஆன் எ குட் நோட் பட இயக்குநர் கரிஷ்மா ராவ், தயாரிப்பாளர் விஸ்வேஸ் எஸ் பிரசாத் மற்றொரு வெற்றியாளர் இட் டேக்ஸ் எ வில்லேஜ் பட இயக்குநர் இந்திரஜித் மோர் படத்தொகுப்பாளர் ஆகான்சா கல்கே.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274500®=3&lang=1
****
TV/IR/KPG/SH
வெளியீட்டு அடையாள எண்:
2274787
| Visitor Counter:
40
இந்த வெளியீட்டை படிக்க:
Urdu
,
हिन्दी
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
English
,
Marathi
,
Kannada
,
Malayalam