பிரதமர் அலுவலகம்
அமைதி மற்றும் விவேகமான சிந்தனையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
10 APR 2026 10:00AM by PIB Chennai
கடினமான சூழ்நிலைகளில் அமைதியாக இருப்பதன் முக்கியத்துவத்தையும், விவேகத்துடன் சிந்திப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
நாட்டின் இளைஞர்கள் இன்னல்களை கடந்து தாங்கள் சாதிக்க நினைக்கும் அனைத்தையும் சாதித்து விடுகிறார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நமது இளைஞர் சக்தியின் பலமே தேசத்தை விரைவான வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிச் செலுத்துகிறது என திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பான சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.
"துன்பமான காலங்களில், அமைதியாக இருந்து விவேகமாகச் சிந்திக்கும் ஒருவர் மனமுடைந்து போவதில்லை. கடினமான சூழ்நிலைகளில், அமைதியான, சிந்தனைமிக்க முடிவுகள் துன்பத்திலிருந்தும் இழப்பிலிருந்தும் பாதுகாக்கின்றன." என்று அந்த ஸ்லோகம் கூறுகிறது.
****
(Release ID: 2250651)
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2274498)
வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam