பிரதமர் அலுவலகம்
சட்டமியற்றும் அமைப்புகளில் பெண்கள் இடஒதுக்கீடு காலத்தின் கட்டாயம்: பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தல்
प्रविष्टि तिथि:
09 APR 2026 8:51AM by PIB Chennai
இந்திய ஜனநாயகத்தை இன்னும் துடிப்பானதாகவும், உள்ளடக்கியதாகவும் மாற்றுவதற்குச் சட்டமியற்றும் அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பது தற்போதைய காலத்தின் கட்டாயம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்துப் பிரதமர் கூறுகையில், இந்த இடஒதுக்கீட்டைக் கொண்டு வருவதில் ஏற்படும் எந்தவொரு தாமதமும் மிகுந்த துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டார். இது தொடர்பான தனது விரிவான கருத்துகளையும், தொலைநோக்குப் பார்வையையும் சமீபத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றின் வாயிலாகப் பகிர்ந்துள்ளார்.
இது குறித்துப் பிரதமர் தனது எக்ஸ் தளத்தில், "சட்டமியற்றும் நாடாளுமன்ற அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பது காலத்தின் தேவை! இது நமது ஜனநாயகத்தை இன்னும் துடிப்பானதாகவும், மக்கள் பங்கேற்பு மிக்கதாகவும் மாற்றும். இந்த இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் தாமதம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது குறித்த எனது விரிவான சிந்தனைகளை இந்தக் கட்டுரையில் பகிர்ந்துள்ளேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2250319®=3&lang=2
-----
SS/VK/RJ
(रिलीज़ आईडी: 2274485)
आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam