ஒளிப்பதிவு என்பது பார்வையாளர்களை நம்ப வைக்கும் கலை: மும்பை சர்வதேசத் திரைப்பட விழாவின் பயிலரங்கில் ஒளிப்பதிவாளர் மதுரா பாலிட் கருத்து
19-வது மும்பை சர்வதேசத் திரைப்பட விழாவில், ஒளிப்பதிவின் ஆன்மா என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது. இதில், கேன்ஸ் திரைப்பட விழாவில் மதிப்புமிக்க பியர் ஆஞ்செனியக்ஸ் எக்ஸெல்லென்ஸ் விருதைப் பெற்ற முதல் இந்தியரான, புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான மதுரா பாலிட் கலந்துகொண்டார்.
திரைப்படத் தயாரிப்பாளர்கள், மாணவர்கள், சினிமா ஆர்வலர்களிடையே உரையாற்றிய பாலிட், ஒளிப்பதிவு என்பது பார்வையாளர்களுக்கான நம்பகமான உலகை உருவாக்கும் கலை என்று விவரித்தார். ஒளிப்பதிவு என்பது வெறும் படங்களைப் பதிவு செய்வதையும் கடந்து, கதைசொல்லலுக்குத் துணைபுரியவும் உணர்வுகளை தூண்டும் இயக்கியாகவும், ஒளி, காட்சியமைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது என்றும் அவர் கூறினார்.
திரைப்படத் துறையில் ஒளிப்பதிவாளரின் பங்களிப்பு குறித்து எடுத்துரைத்த அவர், ஒளிப்பதிவாளர்கள் இயக்குநரின் தொலைநோக்குப் பார்வையை காட்சி மொழியாக மொழிபெயர்க்கிறார்கள் என்று குறிப்பிட்டார். கேமரா அசைவு முதல் லென்ஸ் தேர்வு வரையிலான ஒவ்வொரு படைப்புத் தேர்வும், பார்வையாளர்கள் ஒரு கதையை எவ்வாறு உணர்ந்து அனுபவிக்கிறார்கள் என்பதையும், அதன் கதாபாத்திரங்களுடன் எவ்வாறு இணைகிறார்கள் என்பதையும் வடிவமைக்க உதவுகிறது என்று மதுரா பாலிட் கூறினார்.
லும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274180®=3&lang=1
(Release ID: 2274180)
****
TV/SV/SH
रिलीज़ आईडी:
2274339
| Visitor Counter:
6