பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கடந்த 10 ஆண்டுகளில் தற்சார்பு, புதுமைக் கண்டுபிடிப்பு ஆகியவற்றால் இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்

प्रविष्टि तिथि: 17 JUN 2026 12:34PM by PIB Chennai

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களில் ஏற்பட்டுள்ள சிறப்பான மாற்றத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்சார்பு என்ற தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, புதுமைக் கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம், உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றின் மூலம் வலுப்படுத்தப்பட்ட இந்தியாவின் பாதுகாப்புத் திறன்கள் பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளதாக திரு மோடி தெரிவித்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளில் பாதுகாப்புத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்பது தற்சார்பு மூலம் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் அதிகரித்து வரும் நாட்டின் கவனத்தைப் பிரதிபலிப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வான், நிலம், கடல் ஆகிய பரப்புகளில் இந்தியா தமது பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்தியுள்ளதாகவும், உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை மேம்படுத்தியுள்ளதாகவும், தற்சார்பு, தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கான வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

தற்சார்பு என்னும் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, புதுமைக் கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம், உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றின் மூலம் வலுப்படுத்தப்பட்ட இந்தியாவின் பாதுகாப்புத் திறன்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளன. இப்பதிவு கடந்த 12 ஆண்டுகளில் பாதுகாப்புத்துறையில் இந்தியாவின் முன்னேற்றங்களை குறிப்பிடுகிறது.

***

(Release ID: 2273890)

SS/IR/RJ/KR

 


(रिलीज़ आईडी: 2273975) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam