சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கானமயில் இனப்பெருக்கத் திட்டம்: மூன்று குஞ்சுகள் பொரிக்கப்பட்டதை அடுத்து பறவைகளின் மொத்த எண்ணிக்கை 94-ஆக உயர்வு

இடுகை இடப்பட்ட நாள்: 14 JUN 2026 7:39PM by PIB Chennai

கானமயில் இனப்பெருக்கத் திட்டத்தின் கீழ் கடந்த சில நாட்களில் மேலும் மூன்று குஞ்சுகள் பொரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், திட்டத்தின் நான்காவது ஆண்டில் இதுவரை பொரித்த குஞ்சுகளின் மொத்த எண்ணிக்கை 26-ஐ எட்டியுள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் இது தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொண்ட திரு யாதவ், புதிதாக வெளிவந்த மூன்று குஞ்சுகள், காட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட ஒரு முட்டையிலிருந்தும், பாதுகாப்புப் பராமரிப்பு  சூழலில் இடப்பட்ட இரண்டு முட்டைகளிலிருந்தும் வெளிவந்ததாகக் கூறினார். தற்போது பாதுகாக்கப்படும் பறவைகளின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்தப் பருவத்தில் மேலும் சில குஞ்சுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கானமயில் இனப்பெருக்கத் திட்டத்தின் நான்காவது ஆண்டில், இதுவரை 26 குஞ்சுகள் பொரிக்கப்பட்டுள்ளன. இவற்றில்,  18 குஞ்சுகள் செயற்கை கருத்தரிப்பு மூலமாகவும்இயற்கை இனப்பெருக்கம் மூலமாக 4 குஞ்சுகளும், காடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட முட்டைகளிலிருந்து  4-ம் பொரிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார்.

 

அடிப்படை மரபணுப் பன்முகத்தன்மையை மேம்படுத்தவும், பறவைகள் வேட்டையாடப்படும் அபாயத்தைக் குறைக்கவும், ராஜஸ்தானில் இயற்கையான சூழலில் மூன்று குஞ்சுகள் பொரிக்கப்பட்டுள்ளதாக திரு யாதவ் தெரிவித்தார்.

(Release ID: 2272725)

***

SS/BR/KR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2273969) வருகையாளர் எண்ணிக்கை : 50
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati