பிரதமர் அலுவலகம்
மரியாதை, பாராட்டு ஆகியவற்றின் மதிப்பு குறித்து எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
17 JUN 2026 9:05AM by PIB Chennai
அன்புடன் கூடிய மரியாதையும், அங்கீகாரமும் ஒரு தனிநபரை மதிப்புமிக்கவராகவும், பெருமையுடையவராகவும் திருப்தி உடையவராகவும் உணரச் செய்வதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இதுபோன்ற அங்கீகாரம், தன்னம்பிக்கையை அதிகரிப்பது மட்டுமின்றி, ஒருவரை புத்துணர்ச்சி உடையவராகவும், உற்சாகமுடையவராகவும் மாற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார் –
எந்தவொரு நபராலும் மரியாதையுடன் அங்கீகரிக்கப்படும் போது, நாம் மிகவும் பெருமையுடைவராகவும், ஆசிர்வதிக்கப்பட்டவராகவும் உணர்கிறோம் என்பதாக சுபாஷிதம் கூறுகிறது. ஏனென்றால், சிறந்த மனிதர்கள் அளிக்கும் மரியாதை, ஒருவரிடம் தனது சுய பண்புகள் குறித்த தன்னம்பிக்கையை வலுவடையச் செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273823®=3&lang=1
***
SS/IR/RJ/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2273902)
வருகையாளர் எண்ணிக்கை : 41
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam