MIFF banner

மும்பை சர்வதேசத் திரைப்பட விழா 2026: எண்ணம் முதல் திரைக்கதை வரையிலான பயணத்தை விவரிக்கிறார், இயக்குனர் திரு பிப்லப் கோஸ்வாமி

19-வது மும்பை சர்வதேசத் திரைப்பட விழாவில் (MIFF) இன்று தொடங்கப்பட்ட மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பயிலரங்குத் தொடரின் ஒரு பகுதியாக, 'கருத்தாக்கம் முதல் சாரம் வரை: ஒரு காட்சியின் கட்டமைப்பு' என்ற தலைப்பிலான பயிலரங்கில் திரைக்கதை எழுத்தாளரும், படத்தொகுப்பாளரும், இயக்குநருமான திரு பிப்லப் கோஸ்வாமி உரையாற்றினார்.

 

2025 ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வப் பரிந்துரைப் படமும், சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் கொண்டாடப்பட்ட படங்களில் ஒன்றுமான 'லாபட்டா லேடீஸ்' திரைப்படத்தை எழுதியதற்காக அறியப்பட்ட திரு கோஸ்வாமி, பெரும்பாலும் குழப்பமானதும், ஆழ்ந்த தனிப்பட்ட உணர்வுகளைக் கொண்டதும், மிகுந்த சவால்களைக் கொண்டதுமான கதை சொல்லும் செயல்முறை குறித்து பங்கேற்பாளர்களுக்கு விளக்கினார்.

 

"இதற்கென எந்தவொரு குறிப்பிட்ட சூத்திரமும் இல்லை," என்று அந்த அமர்வு முழுவதும் அவர் திரும்பத் திரும்பக் கூறினார். திரு கோஸ்வாமியைப் பொறுத்தவரை, ஒவ்வொரு கதையும் வெவ்வேறு விதமாகவே தொடங்குகிறது. சில சமயங்களில் அது இயல்பாகவே உருவாகிறது; சில வேளைகளில் உற்றுநோக்குதலின் மூலமும், வேறு சில சமயங்களில் ஒரு யோசனையைத் தூண்டும் ஒரு நிகழ்வின் மூலமும் அது பிறக்கிறது. "எழுத்தாளர்களாகிய நாம் எப்போதும் தேடிக்கொண்டே இருக்கிறோம். சில நேரங்களில் நமக்கு யோசனைகளை உருவாக்கும் செயல்முறை தேவைப்படுகிறது; சில சமயங்களில் கதை தானாகவே வந்து சேர்கிறது. இதற்கு என்று நிலையான பாதை எதுவும் இல்லை”, என்று அவர் கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273680&reg=3&lang=1

(Release ID: 2273680)

****

TV/BR/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #MIFF2026. Tag us @pibmumbai on X, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at miff.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


रिलीज़ आईडी: 2273784   |   Visitor Counter: 6