சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2026, ஜூன் 17 முதல் 26 வரை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் போதைப்பொருள் இல்லாத இந்தியா வாரம் கடைப்பிடிக்கப்படவுள்ளது

प्रविष्टि तिथि: 16 JUN 2026 3:50PM by PIB Chennai

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, 2026 ஜூன் 26 அன்று “போதைப்பொருள் முறைகேடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை” கொண்டாடுகிறது. இந்த நாளின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், ஆண்டுதோறும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாவட்டங்கள் முழுவதும் நேரடியாகவும் இணையவழியாகவும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், “போதைப்பொருள் இல்லாத இந்தியா திட்டம் – வளர்ச்சியடைந்த இந்தியாவின் அடையாளம்” என்ற கருப்பொருளின் கீழ், 2026 ஜூன் 17 முதல் 26 வரை நாடு முழுவதும் ‘போதைப்பொருள் இல்லாத இந்தியா வாரம்’ என்ற நிகழ்வுக்கு இத்துறை  ஏற்பாடு செய்துள்ளது.

இந்த வார நிகழ்வை, ஜூன் 17அன்று, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் விரேந்திர குமார் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைப்பார்.  போதைப்பழக்கத்திலிருந்து விடுபட்டோருக்கான தனிநபர் தகவல் பலகை அறிமுகம், போதைப்பொருள் இல்லாத இந்தியா குறித்த குறும்படம் போன்ற முக்கிய முன்னெடுப்புகளும் இந்த நிகழ்வில் வெளியிடப்படும். இந்த முன்னெடுப்புகள், குடிமக்களின் பங்கேற்பை வலுப்படுத்துதல், தன்னார்வலர்களின் ஈடுபாட்டை அதிகரித்தல், நாடு முழுவதும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை அதிகரித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டவை.

2026 ஜூன் 17 முதல் 26 வரை நாடு முழுவதும் தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் சமூக அணிதிரட்டல் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். இவற்றில் மாபெரும் உறுதியேற்பு இயக்கங்கள், விழிப்புணர்வுப் பேரணிகள், மிதிவண்டிப் பேரணிகள், இளைஞர்கள் தலைமையிலான பிரச்சாரங்கள், சுவரொட்டி தயாரித்தல், முழக்கம் எழுதுதல், கட்டுரைப் போட்டிகள், இணையவழிக் கருத்தரங்குகள், நிபுணர் கலந்துரையாடல்கள், வீதி நாடகங்கள், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், சமூக ஊடகத் தொடர்பு முயற்சிகள் ஆகியவை அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273549&reg=3&lang=1

****

TV/SMB/SH


(रिलीज़ आईडी: 2273777) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu , Kannada , Malayalam