விவசாயத்துறை அமைச்சகம்
தில்லியில் உயர்நிலைக் கூட்டத்தை நடத்திய மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான், ஒட்டுமொத்த வேளாண் துறையையும் ஆய்வு செய்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
16 JUN 2026 4:26PM by PIB Chennai
மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான், இன்று (16 06 2026) புதுதில்லியில் உயர்நிலை ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இதில், 2026-ம் ஆண்டு கரீஃப் பருவத்திற்காக நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆயத்தப் பணிகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தினார். இத்துடன், எல் நினோ வானிலை நிலவ வாய்ப்புள்ள சூழலில், பருத்தி உற்பத்தியை அதிகரிப்பது, பயறு வகைகளில் தற்சார்பு அடைவது, குறைந்த மழைப்பொழிவு உள்ள மாவட்டங்களுக்கான முன்கூட்டிய அவசரகாலத் திட்டங்களை வகுப்பது ஆகியவற்றிற்கு அவர் சிறப்பு முக்கியத்துவம் அளித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடி வழிகாட்டுதலின் கீழ், விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதே அரசின் முதன்மையான முன்னுரிமை என்று அவர் தெரிவித்தார். இப்பருவத்தில் ஏற்பட வாய்ப்புள்ள எந்தவொரு பாதகமான வானிலையிலிருந்தும் வேளாண்மையையும் விவசாயிகளையும் பாதுகாக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்கூட்டியே எடுக்கப்படுவதை உறுதி செய்வதில் இன்றையக் கூட்டம் கவனம் செலுத்தியது.
2026 கரீஃப் பருவத்திற்குப் பயிர் வாரியான இலக்குகள், விதைப்பு முன்னேற்றம் மற்றும் மாநில வாரியான ஆயத்தப் பணிகள் குறித்த ஆய்வின்போது, பருத்தி உற்பத்தியை அதிகரிப்பது பற்றி சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்றது. பருத்தியின் உற்பத்தித்திறன், வருவாய் ஆகிய இரண்டும் கணிசமாக மேம்படும் வகையில், அறிவியல் முறைகளை ஊக்குவித்தல், சரியான ரகங்களைத் தெரிவு செய்தல், ஊடுபயிர் சாகுபடி மற்றும் ஈரப்பதப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பெருமளவில் மேற்கொள்ள வேண்டும் என திரு. சிவராஜ் சிங் சௌஹான் வலியுறுத்தினார். இதற்காக ஓர் இயக்கமாகச் செயல்படுமாறும், இந்தப் பருவத்தில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதை உறுதிசெய்யுமாறும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273565®=3&lang=1
****
TV/SMB/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2273713)
வருகையாளர் எண்ணிக்கை : 49