படைப்பாற்றலில் செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் குறித்த விவாதம், மும்பை சர்வதேச திரைப்படவிழாவில் நடைபெற்றது
செயற்கை நுண்ணறிவு படைப்பாற்றலின் எதிர்காலமா என்ற தலைப்பில் ஓர் விவாதம் 19-வது மும்பை சர்வதேச திரைப்படவிழாவில் நடைபெற்றது. இதில் ஃபயர்ஃபிளை கிரியேட்டிவ் தனியார் நிறுவனத்தின் இணை நிறுவனர் திரு பி சி சனத், வழக்கறிஞர் ஹெட்டல் தேசாய் சோலியா, திரைப்பட இயக்குனர் சுபோத் மேனன் ஆகியோர் கலந்து கொண்டு திரைப்படம், உள்ளடக்கப் படைப்பில் செயற்கை நுண்ணறிவு வாய்ப்புகள், சவால்கள் குறித்து விவாதித்தனர்.
கதை சொல்லல், தயாரிப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவின் மாற்றங்களை ஒப்புக் கொண்ட அதே சூழலில், மனிதர்களின் கற்பனைத் திறனும், அறிவாற்றலும் திரைப்படத்தின் மையம் என்பதை நிபுணர்கள் குறிப்பிட்டனர்.
திரைப்படத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு என்பது அடுத்தக் கட்டம் என்று எஸ்எம்பிடிஇ தலைவர் உஜ்வல் நிர்குட்கர் கூறினார். ஒலி மேம்பாடு, வண்ணத்திருத்தம், காட்சி மேம்பாடு, பழைய திரைப்படங்களை மீட்டெடுத்தல், போன்ற தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு அதிகம் என்றாலும் இத்தொழில்நுட்பத்தை முறைப்படுத்தவும் முழுமையாக ஏற்றுக் கொள்ளவும் இன்னும் சிறிது காலம் ஆகும் என்று அவர் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு என்பது மனித படைப்பாற்றலுக்கு மாற்றாக இருக்காது என்றும், ஆனால் அது சக்திமிக்க துணைக் கருவியாக செயல்பட்டு தயாரிப்புப் பணிகளை எளிதாக்கும் என்று நிபுணர்கள் ஒப்புக்கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273604®=3&lang=1
****
TV/IR/KPG/SH
रिलीज़ आईडी:
2273685
| Visitor Counter:
10