MIFF banner

குறுநாடகம் என்பது கதை சொல்லலின் பரிணாம வளர்ச்சியாகும் - மும்பை சர்வதேச திரைப்படவிழாவில் திரைஉலகினர் கருத்து

டிஜிட்டல் தளங்கள், மாறி வரும் பார்வையாளர்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப கதை சொல்லல் வடிவம் மாறி வரும் நிலையில், 19-வது மும்பை சர்வதேச திரைப்படவிழாவில் “விரைவான திரைப்படம்: குறு நாடகம் என்பது திரைப்படத்தின் விரைவான அம்சமா?” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த அமர்வை நடிகை  ஷீனா சௌகான் ஒருங்கிணைத்தார்.

திரைப்படத் தயாரிப்பாளர் சமீர் மோடி, நடிகை அர்ச்சனா கவி, நடிகர் உஜ்ஜவல் குமார், திரைப்பட இயக்குநர் ரஃபேல் ஸ்டெம்லெவ்ஸ்கி ஆகியோர் பங்கேற்று குறு நாடகத்தின் வளர்ச்சி, சமகால கதை கூறலில் அதன் தாக்கம் குறித்து விவாதித்தனர்.

குறு நாடகம் என்பது ஸ்மார்ட் போன் பயன்பாடு, மாறிவரும் நுகர்வு கலாச்சாரத்தால் உருவான ஒரு இயல்பான பரிணாம வளர்ச்சி என்று அனைவரும் ஒப்புக் கொண்டனர். அதன் வடிவம் சிறியதாக இருப்பினும் பாரம்பரிய திரைப்படத்திற்குத் தேவையான அதே படைப்பாற்றலும் ஆழமான உணர்வுப்பூர்வமும் இதற்கும் தேவைப்படுகிறது.

கொவிட்-19 காலகட்டத்தில் மொபைல்களில் காட்சிகளைப் பார்ப்பது அதிகரித்த போது குறு நாடகம் போன்ற வடிவம் விரைவுபெற்றதாக சமீர் மோடி கூறினார். தொடக்கத்தின் முதல் சில விநாடிகளிலேயே பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பது இதில் உள்ள மிகப் பெரிய சவால் என்று அர்ச்சனா கவி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273532&reg=3&lang=1

***

SS/IR/KPG/SH

 


Great films resonate through passionate voices. Share your love for cinema with #MIFF2026. Tag us @pibmumbai on X, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at miff.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


रिलीज़ आईडी: 2273677   |   Visitor Counter: 11